ADVERTISEMENT

அப்பா அம்மா செய்த புண்ணியம்`: இளையராஜா பற்றி சூரி

Published On:

| By Kavi

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘விடுதலை‘. இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மறைந்த இயக்குநரும் தனது குருநாதருமான பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் வெற்றிமாறன்.

ADVERTISEMENT

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஒன்னோடு நடந்தா’ என்ற பாடல் பிப்ரவரி 7 அன்று வெளியானது. சுகா எழுதி தனுஷ், அனன்யா பட் பாடிய இந்தப் பாடலை இசை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து படத்தின் நாயகனான சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

“என் அப்பா அம்மா செய்த புண்ணியம், என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு.

இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளதுடன்

ADVERTISEMENT

அடுத்த பதிவில் சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

இராமானுஜம்

‘திருமணத்துக்கு முந்தைய காதல்’ : ஹன்சிகா எமோஷனல்!

அதானி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share