விலாக் கலாசாரம் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும் இந்த சோசியல் மீடியா காலத்தில் மின்னணு சாதனங்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எவ்வளவு மலிவான விலையில் சந்தையில் பற்பல கேட்ஜெட்கள் விற்கப்பட்டாலும் நம்பகத்தன்மைமிக்க சில பிராண்ட்களின் தயாரிப்புகளுக்கு என்றுமே மக்கள் மத்தியில் மவுசு குறையாதிருக்கும். அதில் ஒன்றுதான் சோனி நிறுவன தயாரிப்புகள்.
சோனியின் தயாரிப்புகளின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் தரம் உச்சத்திலேயே இருப்பதால் வாடிக்கையாளரின் go to place-ஆக இருந்து வருகிறது. அந்த வகையில் கன்டென்ட் கிரியேட்டர்களை கவரும் வகையில் சோனி அறிமுகப்படுத்திய வீடியோ கேமிராதான் ZV ரக கேட்ஜெட்.
இதன் முந்தைய வெர்ஷன்களை காட்டிலும் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் Sony ZV-1 ரக வீடியோ கேமிராவின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் இந்த zv-1 கேமிராவில் பல 2nd Gen செட்டிங்ஸ்களை உள்ளடக்கியிருக்கிறது
எளிதாக கையாளும் வகையில் குறைவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த zv-1 சோனி கேமிராவில் பயனர்களுக்கு ஏற்றவாறு டைப் சி இணைப்பு வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக சுலபமாக கேமிராவில் இருந்து கம்ப்யூட்டர், லேப்டாப்புக்கு தரவுகளை மாற்றிக்கொள்வதற்காக USB வசதியும் உள்ளது.
இதையெல்லாம் விட, சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் பயன்பெறும் வகையில் மைக்ரோஃபோன் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெறுமனே வீடியோவை பதிவு செய்வதோடு, ஆடியோவையும் தரமாக பதிவு செய்யும் வசதியும் இந்த zv-1 கேமிராவில் சோனி கொடுத்திருக்கிறது.
இதுபோக 20.1 மெகாபிக்சல், 1.0 சென்சார் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த sony zv-1 ரக கேமிராவின் விலையை மட்டும் சோனி நிறுவனம் சஸ்பென்சாக வைத்திருக்கிறது. ஆனால் handhelding உடன் சேர்த்து இந்த ரக வீடியோ கேமிரா நிச்சயம் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்படலாம் எனவும் டெக்கிகளின் கணிப்பாக இருக்கிறது.
பவித்ரா பலராமன்
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!