கேமரா உலகின் புதிய அரசன் – யார் இவன்?

Published On:

| By Selvam

செல்போன்ல பெஸ்ட் கேமரா குவாலிட்டி ஆப்பிள் மற்றும் சாம்சங்லதான்னு சொன்னவங்க மத்தியில, இப்போ புதுசா அவங்களுக்கு போட்டியா ஒருத்தர் வந்தா? ஆமாங்க, நம்ம சோனி எக்ஸ்பீரியா 1VI (Sony Experia 1 VI வந்துருச்சு. இதுல, ஓஎல்இடி டிஸ்பிளேயோட 12ஜிபி ரேம் & கியூஐ சார்ஜிங்னு அட்டகாசமா வந்துருக்கு.

சோனி எக்ஸ்பீரியா 1 VI-ன் சிறப்பம்சங்கள்:

இந்த செல்போன்ல 6.5 இன்ச் அதாவது (1080 × 2340 பிக்ஸல்கள்) மற்றும் ஓஎல்இடி எச்டிஆர் (OLED, HDR) என மிரட்டும் டிஸ்பிளே உள்ளது. இந்த அசத்தலான டிஸ்பிலேவில் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz பிளர் ரெடக்சன் சப்போர்ட் உள்ளது.

மேலும், இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus 2 Protection) மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட், டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Updates) வருகிறது.

அதுமட்டுமிலலாம் சோனி எக்ஸ்பீரியா போனில் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியுடன் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 34என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட்டும் உள்ளடக்கியுள்ளது சிறப்பம்சமாகும்.

பிரமிக்கவைக்கும் கேமரா பிக்ஸலுடன் 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் அதனுடன் எக்ஸ்மோர் டி சென்சார் (Exmor T Sensor) கொண்ட 48 எம்பி மெயின் கேமரா வருகிறது மற்றும் ஹைபிரிட் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது.

ரியல்-டைம் ஐ ஆட்டோபோகஸ் (Real-Time Eye Autofocus), ரியல்-டைம் டிராக்கிங் (Real-Time Tracking) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் டெலிபோட்டோவில் எக்ஸ்மோர் ஆர்எஸ் (Exmor RS) சென்சார் மற்றும் 7.1 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 21.3 எக்ஸ் ஹைபிரிட் ஜூம் கொண்டிருக்கிறது

இதன் உதவியால், அல்ட்ரா பீரிமியம் போட்டோ மற்றும் வீடியோ அவுட் இந்த மாடலில் எதிர்பாக்கமுடியும். அதேபோலவே எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் கொண்ட 12 எம்பி செல்பீ ஷூட்டரும், இந்த கேமராவில் வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டும் உள்ளது.

ஆடியோ செபிசிபிகேஷனை எடுத்துக்கொண்டால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), 360 ரியாலிட்டி ஆடியோ (Reality Audio), 360 ஸ்பாஷியல் சவுண்ட் (Spatial Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது. அதே நேரத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஸ்டீரியோ ரெக்கார்டிங் (Stereo Recording) சப்போர்ட் கொண்டுள்ளது.

முக்கியமாக IPX5 மற்றும் IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட், IP6X டஸ்ட் ப்ரூப் சான்றிதழ் உள்ளது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் எக்ஸ்பீரியா அடாப்டிவ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி பேட்டரி வருகிறது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), பேட்டரி ஷேர் ஃபங்ஷன் (Battery Share Function) சப்போர்ட்டும் உண்டு.

காக்கி கிரீன் (Kakkhi Green), பிளாக் (Black), பிளாட்டினம் சில்வர் (Platinum Silver), என 3 வண்ணங்களில் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.1,26,500 ஆகும்.ஐரோப்பா மற்றும் யுகே-வில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன் பின்னர் மற்ற நாடுகளில் வெளியாகிறது.

-கணேஷ்.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அக்னி நட்சத்திரம் டூ ஆரஞ்ச் அலர்ட்: அப்டேட் குமாரு

மீண்டும் ஒரு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share