குடும்ப தகராறில் கொடூரம்: தாயை உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள்!

Published On:

| By christopher

மேற்கு திரிபுராவில் 62 வயதான தாயை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக்கொன்ற மகன்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பக் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமர்பாரியில் கணவனை இழந்த அந்த பெண் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். அவரது மற்றொரு மகன் அகர்தலாவில் வசித்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 62 வயதான பெண்ணை அவரது மகன்கள் மரத்தில் கட்டிவைத்து உயிருடன் எரித்துக் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மகன்களை கைது செய்துள்ள போலீஸார், குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூரக் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசியுள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி கமால் கிருஷ்ணா கோலோய், “ஒரு பெண் தீ வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு அங்கு விரைந்து சென்று, மரத்தில் எரிந்த நிலையில் இருந்த உடலைக் கண்டெடுத்தது. உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது இரண்டு மகன்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். இப்போது விசாரணைக்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், இதில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாகப் பெற்ற தாயை மரத்தில் கட்டிவைத்து உயிரோடு எரித்துக் கொன்ற மகன்களின் இந்தக் கொடூரச் செயல், அந்தப் பகுதயில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மருத்துமனையில் ரஜினி : நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து!

டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் தேர்தல் முதல் இந்தியா – வங்கதேசம் இறுதி நாள் ஆட்டம் வரை!

அப்பலோவில் ரஜினி… கிட்னியில் பிரச்சனையா?

கிச்சன் கீர்த்தனா : பாசிப்பயறு வெல்ல சுண்டல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share