நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் மூலம் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி இருவரும் ரூ142 கோடி ஆதாயம் அடைந்ததாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.Sonia Rahul Gandhi Gained Rs. 142 Crore Through Illegal Money Transfers
அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நஷ்டத்தில் செயல்பட்டது. இதனால் யங் இந்தியன் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை இந்த வழக்கைத் தொடர்ந்தது. ஏற்கனவே சிபிஐ இந்த வழக்கை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையும் இணைந்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் டெல்லி நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மூலம் சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் ரூ.142 கோடி ஆதாயம் அடைந்ததாக குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஜூலை 2-ந் தேதி முதல் நாள்தோறும் நடைபெறும் என உத்தரவிடப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.