சோஷியல் மீடியாவால் ஸ்டார்களிடம் ஏற்பட்ட மாற்றம்!

Published On:

| By Minnambalam Desk

Social media has changed stars

டாம்க்ரூஸ் Social media has changed stars

சமூக வலைதளங்கள் வந்தபிறகு, தங்களது சுதந்திரம் பறிபோய்விட்டதாகச் சில திரையுலக நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருவது நாம் அறிந்ததே. ஆனாலும், அது முந்தைய தலைமுறையின் குரல் என்று அக்கருத்தை மறுதலித்து வருகின்றனர் இன்று திரையுலகில் வெற்றிகரமாகத் திகழ்ந்து வருபவர்கள். தங்களது புதிய பட அறிவிப்புகள் முதல் கடந்த காலப் படங்களின் வெற்றி, தோல்வி குறித்த ரசிகர்களின் அபிப்ராயங்கள் வரை பல விஷயங்கள் பற்றி விவாதிக்க ஏதுவாகத் தங்களுக்கென்று ஒரு குழுவையே வைத்திருக்கின்றனர். அதிலிருப்பவர்கள் 24 மணி நேரமும் திரையுலகிலும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களின் ரசிகர் வட்டத்திலும் என்ன நிகழ்கிறதென்பதை ‘அப்டேட்’ செய்து வருகின்றனர். Social media has changed stars

நிலைமை இப்படியிருக்க, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு நட்சத்திர நடிகர் ஒருவர் சமூகவலைதளங்களால் நட்சத்திரங்களின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதாகச் சொன்னால் எப்படியிருக்கும்? Social media has changed stars

ADVERTISEMENT
Social media has changed stars

ஆம், சமீபத்தில் ‘தீரன்’ எனும் மலையாளப் பட புரோமோஷன் தொடர்பாக ஒரு பேட்டியில் பங்கேற்றார் நடிகர் மனோஜ் கே ஜெயன். தூள், ஜனா உட்படப் பல தமிழ் படங்களில் ரசிகர்கள் இவரை ரசித்துக் கொண்டாடியிருக்கின்றனர்.

இப்பேட்டியின்போது, “இப்போது பொதுவெளியில் எந்தவொரு நட்சத்திரமும் தங்களது ரசிகர்களிடம் கோபத்தை வெளிக்காட்டுவதில்லை. எப்போதும் சில கேமிராக்கள் தங்களைக் கண்காணிக்கிறது என்ற நினைப்போடு நிதானத்தை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டனர். இது சோஷியல் மீடியாவால் வந்த மாற்றம்.

ADVERTISEMENT

இதற்கு முன்பு இப்படி நடக்காது. தங்களுக்குப் பிடிக்காததை ரசிகர்கள் செய்துவிட்டால், உடனே அவர்கள் நிதானத்தை இழந்துவிடுவார்கள். அவர்களோடு வாதம் செய்வார்கள்; வார்த்தைகள் எல்லை மீறுவதும் கூடச் சில நேரங்களில் நிகழும்.

இப்போ யார், எங்கிருந்து படம்பிடிக்கிறாங்கன்னு தெரியலை. அதனால, அப்படிப்பட்டவங்கள்ல பலர் எச்சரிக்கை ஆயிட்டாங்க. பொதுவெளியில ரொம்ப நாகரிகமா நடந்துக்கறாங்க” என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

கூடவே, சமூகத்தின் பார்வையும் கூட இன்று பெருமளவில் மாறியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மனோஜ் கே ஜெயன்.

இன்றைய சூழலில் திரையுலக நட்சத்திரங்களால் எந்தவொரு விஷயத்திற்கும் ‘ரியாக்ட்’ செய்ய முடியாது என்கிறாரா அல்லது அத்துமீறல் நிகழும்போதும் அடக்கி வாசிக்கத்தான் வேண்டியிருக்கிறாரா என்கிறாரா? அவர் சொன்ன விஷயம் தெளிவாக இருந்தாலும், இப்படிச் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

கூடவே, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த எந்த நட்சத்திரம் அல்லது நட்சத்திரங்களைப் பற்றி மனோஜ் கே ஜெயன் குறிப்பிடுகிறார் என்ற விவாதமும் தற்போது அதே சோஷியல் மீடியாவில் நிகழ்ந்து வருகிறது.

Social media has changed stars
Social media has changed stars
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share