இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளரும் ஒரு பொருளாதாரமாக இருக்கலாம்; ஆனால் சமூக நடத்தை, பாதுகாப்பு, பாலின அணுகுமுறை, வேற்றுமை ஆகியவற்றில் இந்தியா எப்படித் தேறுகிறது?Social Behaviour of India
இதுபற்றி முதன்முறையாக 21 மாநிலங்களில் ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் நாட்டின் சமூக முன்னேற்றம் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
சுருக்கமாக: Social Behaviour of India
- சமூக நடத்தையில் கேரளம் முன்னணியில் இருக்கிறது. அதன் பின் தமிழ்நாடும் மேற்கு வங்கமும் உள்ளன.
- சமூக நடத்தையில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக இருப்பவை உத்தரப் பிரதேசமும் பஞ்சாபும்
- 21 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் ஆய்வு நடைபெற்றது
உள்நாட்டு நடத்தையை (Gross Domestic Behaviour – GDB) அளவிட நாட்டிலேயே முதன்முறையாக ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் பல அலகுகளில் கேரளா முன்னணியில் இருப்பதும் அதன்பின் தமிழ்நாடும் மேற்கு வங்கமும் இருப்பதும் தெரியவந்துள்ளன. Social Behaviour of India

21 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் (முழுமையான செய்முறை குறித்து கீழே பார்க்கவும்) நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பலவீனமான சமூகநலன் குறியீடுகளை வெளிப்படுத்தும் விதமாக உத்தரப் பிரதேசமும் பஞ்சாபும் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஆய்வு நிறுவனமான ‘ஹௌ இந்தியா லிவ்ஸ்’ (How India Lives) உடன் சேர்ந்து நடத்தப்பட்ட இந்த முன்னோடி ஆய்வில் குடிமக்களின் சமூக, நாகரிக அணுகுமுறை/நடத்தைகள் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தர வரிசை -2025 | மாநிலம் |
1 | கேரளம் |
2 | தமிழ்நாடு |
3 | மேற்குவங்கம் |
4 | மகாராஷ்டிரம் |
5 | ஒதிஷா |
6 | இமாசலப் பிரதேசம் |
7 | ஹரியானா |
8 | உத்தராகண்ட் |
9 | சண்டிகர் |
10 | தில்லி தலைநகரப் பிராந்தியம் |
11 | தெலங்கானா |
12 | பிகார் |
13 | ஜார்க்கண்ட் |
14 | ராஜஸ்தான் |
15 | சத்தீஸ்கர் |
16 | அசாம் |
17 | ஆந்திரப் பிரதேசம் |
18 | கர்நாடகம் |
19 | மத்தியப் பிரதேசம் |
20 | குஜராத் |
21 | பஞ்சாப் |
22 | உத்தரப் பிரதேசம் |
முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட மாநிலங்கள் முதலிடங்களில் உள்ளன. டாப்-5 மாநிலங்களாக இடம்பெற்றிருக்கும் மகாராஷ்டிரமும் ஒதிஷாவும் வலுவான சமூகக் கட்டமைப்பைக் காட்டியிருந்தன. வடமாநிலங்களுள் ஒன்றுகூட இப்படி வரவில்லை.
நாகரிக நடத்தை! Social Behaviour of India
பொதுவிதிகளை மதித்து நடப்பதைப் பற்றிய நாகரிக நடத்தை குறித்த ஆய்வு பலவித சுவாரசியமான புள்ளிவிவரங்களைத் தந்துள்ளது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 85% பேர் போக்குவரத்து கட்டணம் செலுத்தாமல் பயணிப்பதில்லை என்று தெரிவித்திருந்தாலும் 2023-24-ஆம் ஆண்டில் ரயில்வேத் துறை மட்டும் டிக்கெட் வாங்காமல் பயணித்த 3.6 கோடிப் பேரிடமிருந்து அபராதக் கட்டணமாக ரூ.2,231.74 கோடியை வசூலித்திருந்தது.
விதிகளை அமலாக்குவதன் தோல்வியையும் தவறிழைத்தவர்களை ஒப்புக்கொள்ள வைக்கும் அரசின் கடமையையும் இவ்விவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ஆய்வில் வெளியான இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் என்னவெனில் ஆய்வில் கலந்துகொண்டவர்களுள் 61% பேர் தமது வேலையை முடித்துக்கொள்ள லஞ்சம் தரத் தயாராக இருக்கிறார்கள். இதில் உத்தரப் பிரதேசம் முதலிடம். அதேபோல் 52% பேர் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட வரிகளைக் கட்டாமல் தவிர்க்க பணம் செலுத்தத் தயாராக இருக்கிறார்கள். Social Behaviour of India
தர வரிசை -2025 | மாநிலம் |
1 | தமிழ்நாடு |
2 | மேற்குவங்கம் |
3 | ஒதிஷா |
4 | தில்லி தலைநகரப் பிராந்தியம் |
5 | கேரளம் |
6 | ஹரியானா |
7 | மகாராஷ்டிரம் |
8 | உத்தராகண்ட் |
9 | இமாசலப் பிரதேசம் |
10 | ஜார்க்கண்ட் |
11 | பிகார் |
12 | சண்டிகர் |
13 | தெலங்கானா |
14 | ராஜஸ்தான் |
15 | மத்தியப் பிரதேசம் |
16 | சத்தீஸ்கர் |
17 | கர்நாடகம் |
18 | உத்தரப் பிரதேசம் |
19 | ஆந்திரப் பிரதேசம் |
20 | அசாம் |
21 | குஜராத் |
22 | பஞ்சாப் |
சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 76% பேர் பிரதமர் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ இயக்கத்துடன் இணையும் விதமாக ரொக்கப் பரிவர்த்தனைக்குப் பதிலாக ஆன்லைன் பேமெண்டுகளை விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மத்திய அரசின் சர்ச்சைக்குரிய பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இவ்வகைப் பரிவர்த்தனைக்கு மவுசு அதிகமாகிவிட்டது. இப்பரிவர்த்தனையை 96% பேர் விரும்பியதால் இப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி இருக்கிறது. Social Behaviour of India
ஸ்வீடன் அனுபவத்தின்படி வரிஏய்ப்பு நடப்பது டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் குறைகிறது. ஊழல் குறைந்து ஒளிவுமறைவற்ற நிதி ரீதியான கட்டமைப்பு உருவாக்க இது வழி வகுக்கும்.

‘இந்தியா டுடே’விடம் பேசிய சமூகவியலாளர் திபங்கர் குப்தாவின் கூற்றுப்படி, “எது சரியென்று பெரும்பாலான குடிமக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதன்படி நடக்க அவர்கள் தவறிவிடுகின்றனர். அறியாமைதான் இந்தியாவின் குடிமைக் குறைபாடுகளுக்கு முக்கியக் காரணம் என்ற அனுமானத்தை இந்த ஆய்வு நிரூபிக்கிறது.” Social Behaviour of India
பாலின நடத்தைகள் Social Behaviour of India
‘பாலின நடத்தைகள்’ குறித்த ஆய்வில் முன்னேற்றம், ஆணாதிக்க சமூகம் இரண்டிற்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒரு தேசம் வெளிப்படுகிறது. பாலினப் பாகுபாடு (காட்டாத) சோதனையில் மீண்டும் கேரளாவுக்கே முதலிடம், உத்தரப் பிரதேசத்துக்கு கடைசி இடம்தான். Social Behaviour of India
ரேங்க்-2025 | மாநிலம் |
1 | கேரளம் |
2 | உத்தராகண்ட் |
3 | தமிழ்நாடு |
4 | இமாசலப் பிரதேசம் |
5 | மகாராஷ்டிரா |
6 | தெலங்கானா |
7 | சண்டிகர் |
8 | மேற்கு வங்கம் |
9 | ஒதிஷா |
10 | தில்லி தலைநகரப் பிராந்தியம் |
11 | ஹரியானா |
12 | ஜார்க்கண்ட் |
13 | பிகார் |
14 | மத்தியப் பிரதேசம் |
15 | கர்நாடகம் |
16 | ஆந்திரப் பிரதேசம் |
17 | ராஜஸ்தான் |
18 | சத்தீஸ்கர் |
19 | பஞ்சாப் |
20 | அசாம் |
21 | குஜராத் |
22 | உத்தரப் பிரதேசம் |
மகன்களைப் போலவே மகள்களுக்கும் கல்வி வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென ஆய்வில் பங்கேற்றோரில் 93% பேர் கூறினர். தொழில்முறை வேலை வாய்ப்புக்கென சொந்த மாநிலத்தை விட்டு பெண்கள் வெளியே செல்ல 84% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வீட்டு விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை ஆண் குடும்ப உறுப்பினர்கள்தான் எடுக்க வேண்டுமென ஆய்வில் பங்கேற்ற 69% பேர் கருதுகின்றனர். இந்தியா பின்தங்கியுள்ள மற்றொரு துறையாக பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடலாம். 41% பெண் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது சீனா (60%) மற்றும் அமெரிக்காவை (58%) விடக் குறைவானதாகும்.
பொது (இடங்களில்) பாதுகாப்பு!
பொது இடங்களில் பாதுகாப்பு என்ற அம்சம்தான் ஒரு மாநிலத்தை வளமானதாக ஆக்குகிறது. இதிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது கேரள மாநிலமே. ஆய்வின்படி கேரளாவுக்குப் பின் இமாசலப் பிரதேசமும் ஒதிஷாவும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
‘மிகச் சிறப்பான நடத்தை’ உள்ள மாநிலமாக தமிழ்நாடும் ‘மிக மோசமான நடத்தை’ உள்ள மாநிலமாக கர்நாடகமும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. கர்நாடக மாநிலத்திலிருந்து ஆய்வில் கலந்துகொண்டவர்களில் கிட்டத்தட்ட 79% பேர் (பாலியல்) தொந்தரவு அடிக்கடி நடக்கும் பிரச்சினைதான் என்று தெரிவித்திருந்தனர்.
ரேங்க்-2025 | மாநிலம் |
1 | கேரளம் |
2 | இமாசலப் பிரதேசம் |
3 | ஒதிஷா |
4 | மேற்கு வங்கம் |
5 | மகாராஷ்டிரா |
6 | ஹரியானா |
7 | உத்தராகண்ட் |
8 | பிகார் |
9 | தமிழ்நாடு |
10 | தில்லி தலைநகரப் பிராந்தியம் |
11 | ஜார்க்கண்ட் |
12 | தெலங்கானா |
13 | குஜராத் |
14 | மத்தியப் பிரதேசம் |
15 | அசாம் |
16 | சத்தீஸ்கர் |
17 | சண்டிகர் |
18 | ஆந்திரப் பிரதேசம் |
19 | ராஜஸ்தான் |
20 | கர்நாடகம் |
21 | பஞ்சாப் |
22 | உத்தரப் பிரதேசம் |
ஆய்வில் கலந்துகொண்டோரில் 86% பேர் பொதுப்போக்குவரத்தில் பாதுகாப்பாகப் பயணிக்க முடிவதாகக் குறிப்பிட்டிருந்தாலும் பாலியல் தொந்தரவை எதிர்நோக்கியதாக 44% பெண்கள் தெரிவித்தனர். Social Behaviour of India

இன்னொரு முக்கியமான புள்ளிவிவரம் என்னவெனில் வன்முறையான குற்றம் பற்றி புகார் தெரிவிப்போம் என 84% பேர் கூறியிருந்தாலும் தில்லி போன்ற பெருநகரங்களில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவாகும் சதவீதம் மிகவும் குறைவாகவே இருந்தது. உதாரணமாக, திருட்டுக் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 7.2% பேர் மட்டுமே புகாரளித்துள்ளது தெரியவந்துள்ளது. Social Behaviour of India
வேறுபாடும் பாரபட்சமும்! Social Behaviour of India
மத/ஜாதி ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக இருப்பதாக இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டாலும் பல மாநிலங்களில் பாரபட்சங்கள் நிலவுகின்றன. முதலிடத்தில் கேரளமும் கடைசி இடத்தில் மத்தியப் பிரதேசமும் இப்பட்டியலில் காணப்படுகின்றன.
ஆய்வில் கலந்துகொண்டோரில் 70% பேர் அக்கம்பக்கத்தில் பிற மதக் குடிமக்கள் வசிப்பதை வரவேற்பதாகக் கூறினார். பணியிடங்களைப் பொறுத்தவரை வேலைக்கு ஆளெடுப்பதில் மதரீதியான பாகுபாடு இருப்பதை 60% பேர் எதிர்க்கின்றனர். மதரீதியான பாகுபாடு காட்டும் வேலைதரும் எஜமானரின் உரிமையை எதிர்ப்பதிலும் முதலிடம் கேரளாவுக்கே.
ரேங்க்-2025 | மாநிலம் |
1 | கேரளம் |
2 | தமிழ்நாடு |
3 | மேற்கு வங்கம் |
4 | மகாராஷ்டிரம் |
5 | சண்டிகர் |
6 | ஹரியானா |
7 | அசாம் |
8 | தெலங்கானா |
9 | ராஜஸ்தான் |
10 | பிகார் |
11 | ஆந்திரப் பிரதேசம் |
12 | ஒதிஷா |
13 | ஜார்க்கண்ட் |
14 | சத்தீஸ்கர் |
15 | இமாசலப் பிரதேசம் |
16 | குஜராத் |
17 | தில்லி தலைநகரப் பிராந்தியம் |
18 | பஞ்சாப் |
19 | கர்நாடகம் |
20 | உத்தராகண்ட் |
21 | உத்தரப் பிரதேசம் |
22 | மத்தியப் பிரதேசம் |
இருப்பினும் ஜாதி/மதக் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான அதீத எதிர்ப்புதான் ஆய்வின் மிக அதிர்ச்சி தரவல்ல முடிவாக அமைந்தது. இந்தியாவின் வேரூன்றிய சமூகப் பிரிவினை இதில் வெளிப்படுகிறது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 61% பேர் கலப்பு மதத் திருமணத்திற்கெதிராகவும் 56% பேர் கலப்பு ஜாதித் திருமணத்திற்கெதிராகவும் குரல் கொடுத்திருந்தனர்.

வளர்ச்சிக்கான பாதை என்பது ஒட்டுமொத்த உற்பத்தி எண்ணிலோ கட்டமைப்பு திட்டங்களிலோ மட்டும் இருப்பதில்லை. மாறுபாடு, பாலின சமநிலை போன்ற சமூக அலகீடுகள் வழியாக நடக்கும் புரட்சியிலும்தான் இருக்கிறது.
ஆய்வுமுறை Social Behaviour of India
இந்த ஆய்வை இந்தியா டுடே குழுமமானது ‘ஹௌ இண்டியா லிவ்ஸ் (HIL) மற்றும் கடென்ஸ் இண்டர்நேஷனல் அமைப்புகளுடன் இணைந்து நடத்தியது. 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலுள்ள 98 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 54.4% பேர் நகரப் பகுதிகளையும் 45.6% பேர் கிராமப்புறங்களையும் சார்ந்தவர்கள்.
சமூக நடத்தை (சமூக செயல்பாடுகளில் பங்கேற்றல், பொதுவிதிகளைப் பின்பற்றுதல்) – 12 கேள்விகள், பொதுப் பாதுகாப்பு (சட்ட அமலாக்க முறையில் நம்பிக்கை, அமலாக்கம், பிரத்தியேக பாதுகாப்பு கருத்துகள்) – 6 கேள்விகள், பாலின அணுகுமுறை (பாலினத்தாரின் பங்கு, சமநிலை பற்றிய கருத்துகள்) – 7 கேள்விகள், மற்றும் வேறுபாடு &பாகுபாடு (ஜாதி, மதம், இன அடிப்படையில் பாரபட்சம் காட்டுதல்) – 5 கேள்விகள் என நான்கு விரிவான கருத்தாய்வுகளின் கீழ் 30 கேள்விகள் இந்த ஆய்வில் கேட்கப்பட்டன.
நன்றி: இந்தியா டுடே
தமிழில்: சுப்ரஜா