நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் வரும் 22-ந் தேதி பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் அறிவித்துள்ளன.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய விவகாரத்தில் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நீதிபதி ப.உ.செம்மல் மீதான இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியக் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பல்வேறு சமூக, ஜனநாயக இயக்கங்கள் இணைந்து வரும் 22-ந் தேதி ‘நீதிபதிக்கு நீதி’ கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளன. புதுச்சேரி ஒதியஞ்சாலை அண்ணா சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
