ஒரே நாளில் இத்தனை லட்சம் பேர் பயணமா? மெட்ரோ ரயில் சாதனை!

Published On:

| By Jegadeesh

சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயிலில் நேற்று (செப்டம்பர் 12 ) ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் இன்று (செப்டம்பர் 13 ) வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

So many lakh people travel in one day Metro rail

ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 03.01.2022 அன்று 1,35,977 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 28.02.2022 அன்று 1,43,252 பயணிகளும்,

மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25.04.2022 அன்று 1,74,475 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அதேபோல், மே மாதத்தில் அதிகபட்சமாக 26.05.2022 அன்று 1,91,720 பயணிகளும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகளும்,

ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.08.2022 அன்று 2,20,89 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

So many lakh people travel in one day Metro rail

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,30,611 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 21,419 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 11,189 பயணிகளும்,

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 10,599 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து 10,289 பயணிகளும் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள் !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share