பாட்டுக்கு இசையா? இசைக்கு பாட்டா?: இளையராஜா வைரமுத்து விவகாரம் குறித்து சினேகன் பேச்சு!

Published On:

| By Minnambalam Login1

எஸ்.ஏ.எஸ் புரொடக்சன்ஸ் சார்பில் யோகராஜ் செபாஸ்டியன் தயாரிப்பில் இயக்குனர் சித்திக் எழுதி இயக்கி நடிக்கும் நாளைய இயக்குநர் படத்தின் தொடக்க விழா இன்று (மே 4) சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகரும் பாடலாசிரியருமான சிநேகன் , இமான் அண்ணாச்சி, சேலம் ஆர்.ஆர் தமிழ்ச் செல்வன், கூல் சுரேஷ், நடன இயக்குனர் தீனா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில்  பேசிய பாடலாசிரியர் சினேகனிடம் இளையராஜா – வைரமுத்து பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சினேகன்,  ‘தம் உரிமைக்காக போராடுவது எப்போதும் தவறாக இருக்காது. காலம் தாழ்த்தி இப்போது ஒரு விவாதத்தை துவங்கி இருக்கிறார்கள். அதில் கருத்து சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. பாட்டுக்கு இசையா அல்லது இசைக்கு பாட்டா என்பதை விட படத்துக்கு பாட்டு தேவைப்படுகிறது. அதை நோக்கி நான் போகிறேன்.

ADVERTISEMENT

அவர் உரிமையை அவர் கேட்கிறார். இன்னும் நீதிமன்றத்தில் நீதி உயிரோடு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கான நீதி கிடைக்கும். ஒருத்தர் உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுவது அவர் உரிமை.

நான் இதில் தலையிட முடியாது.ஏற்கனவே ஐபிஆர்எஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. உலக அளவில் இசையை எப்படி பயன்படுத்துகிறார்கள்.

ADVERTISEMENT

அது யார் யாருக்கு அந்த உரிமை வரவேண்டும் என்று ஒரு பெரிய கட்டமைப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இளையராஜா சார் உரிமையை கோருகிறார். அதிலுள்ள நியாயம், விவாதங்களை முடிவெடுக்க வேண்டும். பணத்தை போடுவது தயாரிப்பாளர் என்றாலும் இங்கு ஒரு சிஸ்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் போது அதை யார் யாருக்கெல்லாம் சேர வேண்டும். அதை உருவாக்கியவர் யார் என்று பைலாவில் இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் வழக்கு போடுகிறார்கள்.

அது இன்னும் தீர்வுக்கு வரவில்லை. வரும் போது தான் சொல்ல முடியும். ஒரு வழக்கோ விவாதமோ நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை ஒரு தனி மனிதனாக நான் தீர்வு சொல்ல முடியாது என்றார்.

Ilayaraja

கூலி படத்தின் டிரைலரில் தங்கமகன் பட பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு இளையராஜா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பற்றி  கேட்கப்பட்ட கேள்விக்கு,கண்டிப்பாக என்னுடைய உரிமை பறிபோகும் போது நான் குரல் கொடுப்பேன். ஆனால் அதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று போராடுவதற்கான வலு இருப்பவர்கள் போராடுகிறார்கள்.

வாய்ப்பு வரும்வரை எங்களை மாதிரி சில பேர் அமைதியாக இருக்கிறார்கள். அவரவர் உரிமைக்காக போராடுகிறார்கள். அதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்லும். தவறு செய்வதில் பெரியவர் சிறியவர் என்று யாரும் இல்லை.

யார் செய்தாலும் தவறு தவறு தான். அது தவறு கொடுங்கள் என்று அவர் கேட்கிறார். அது தவறா இல்லையா என்று நீதிமன்றம் சொல்ல போகிறது. என்னுடைய பாடல்களை இந்த நிறுவனம் உபயோகப்படுத்தப்படுகிறது என்று ஒரு நிறுவனத்தை கேட்பதாகவும், என்னிடம் ஒரு அனுமதியாவது கேட்டிருக்கலாமே என்று தான் சொல்கிறார்.

இதை வெளியில் இருந்து கணிக்க முடியாது.இது காலம் தாழ்த்தி போன வழக்கு. ஏற்கனவே 20 வருடமாக நீயா நானா என்று பேசி கொண்டு இருப்பதாகவும், இது அவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

எங்கே இந்த காழ்ப்புணர்வு தொடங்கியது என்று நமக்கு தெரியாது. எழுத்து எப்படி ஒரு எழுத்தாளருக்கு முக்கியமோ அது போல இசையமைப்பாளருக்கு இசை ரொம்ப முக்கியம்.

Vairamuthu

தமிழ் சினிமாவிலும் பாடலுக்கு சில நாம்ஸ் இருக்கிறது.  தன்னிடம் எதுவும் சொல்லாமல் பயன்படுத்தும் போது கேட்பது எனக்கு தவறாக தோன்றவில்லை. இனி வருங்காலத்தில் கேட்டு பயன்படுத்தலாம்.

நிறைய படங்களில் இளையராஜா சாரிடம் அனுமதி கேட்டு அவர் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு அவர் எதுவும் சொல்லவில்லை. வழக்கும் போடவில்லை. பணம் கேட்டாரா வாங்குனாரா என்று எதுவுமே நமக்கு தெரியாது. குறைந்தபட்சம் என்னிடம் அனுமதி கேளுங்கள் என்று சொல்கிறார்.

வைரமுத்துவை பற்றி கங்கை அமரன் பேசியது தொடர்பாக, இவ்வளவு காலம் கழித்து இவர் பேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்து போச்சு. அதற்குப் பிறகு எழுதும்போது ஏதாவது பிரச்சினை வந்தால் பேசலாம்.

இளையராஜா, வைரமுத்து & கங்கை அமரனுக்கு என்ன பிரச்சினை, பிரிந்த சரியான காரணத்தை சினிமாவில் யாராவது சொல்ல முடியுமா? தொடக்கம் முடிவு எது என்று தெரியாது.

இடையில் நாம் ஏன் விவாத பொருளாக ஆக்க வேண்டும் என்பது தான். எனக்கு தெரிந்து காலம் தாழ்த்தி அவர் பேசியிருக்கக் கூடாது. அதற்கு அவர் அதிகப்படியான வார்த்தையையும் விட்டிருக்கக் கூடாது. அதுதான் தாழ்மையான வேண்டுகோள் இருவர் மீதும் எனக்கு மதிப்பு இருக்கிறது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share