மாடர்ன் குழந்தைகளின் ஹீரோக்கள் உலகில் நிச்சய இடத்தைப் பிடித்திருப்பவை Smurfs எனப்படும் கதாபாத்திரங்கள். நீலநிற உடலில் வெள்ளைநிற உடையுடன், கறுப்பு – பச்சை – சிகப்பு வண்ண கண்களில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுக்க குழந்தை ரசிகர்கள் அதிகம். இதுவரை வெளியான இரண்டு படங்களையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று பார்த்து வெற்றியடைய வைத்தவர்கள் அந்த சிறுவர்/சிறுமிகள்தான்.
ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகும் Smurfs: The Lost Village திரைப்படத்தின் ஃபேவரிட் கேரக்டர்களான Brainy மற்றும் Smurfette கேரக்டர்களுடன் ஞாயிறு மாலையை விஜயா Forum Mall-க்கு வந்த சிறுவர்/சிறுமிகள் கொண்டாடினார்கள். சர்ப்ரைஸாக அவர்களைச் சந்தித்த இந்த Smurfகள் அவர்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். அத்துடன், Smurfs திரைப்படத்தைப் பற்றிய கேள்விகள் சில கேட்கப்பட்டு அதற்கு அவர்கள் பதில் சொல்வதுமென மாலுக்கு வந்திருந்த அனைவரும் கூடிநின்று கை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.,”