இளம் தலைமுறையினரிடம் முடி உதிர்வு பிரச்சினை பெருமளவு அதிகரித்து வருகிறது. ஆண், பெண் என பாலின பேதமின்றி அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் நிறைய இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். Onion Juice for Hair Fall
உதாரணத்திற்கு, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சரியான தூக்கம் இல்லாதது, மிக நீண்ட நேரமாக அலுவலக வேலையில் ஈடுபடுவது, மன அழுத்தம் என்று பல காரணங்கள் முடி உதிர்வை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான ஷாம்பூக்கள், ஹேர் சீரம் போன்றவற்றில் மூலப்பொருளாக சின்ன வெங்காயத்தின் சத்துகள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் சின்ன வெங்காயத்தை கொண்டு இயற்கையான ஹேர் மாஸ்கை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
முதலில் நம் தலைமுடிக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த வெங்காய சாற்றை அரிசி கழுவிய தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் சிறிய துண்டு காட்டனை நனைத்து அதை தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும் வகையில் தேய்க்க வேண்டும். தலையில் மெலிதாக மசாஜ் செய்ய வேண்டும்.
இதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். Onion Juice for Hair Fall