பகலில் உறங்கலாமா? பலருக்கும் இருக்கும் அதி முக்கியமான கேள்வி இது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பகல் உறக்கம் குறித்த விவாதங்கள் அவ்வளவாக எழவில்லை. இரவில் ஏற்பட்ட நிம்மதியான உறக்கம், அடுத்த நாள் பகல் முழுவதும் உற்சாகமாகச் செயல்பட அனுமதித்தது.
ஆனால், சமீபமாக இரவு உறக்கத்தின் அளவு பல மடங்கு குறைந்ததன் காரணமாக பகலில் உறக்கத்தை நாடும் எண்ணம் பலருக்கும் அதிகரித்திருக்கிறது.
முதல் நாள் இரவு முழுமையான உறக்கத்தைத் தொலைத்துவிட்ட பிறகு, மறுநாள் நிச்சயம் சோர்வு, தலைபாரம், ஒருவிதமான எரிச்சல் போன்ற குறிகுணங்கள் தோன்றும்.
அப்போது பகல் நேரத்தில் கொஞ்சம் கண் அயரலாமா என்ற எண்ணம் உருவாவதும் இயல்பே.
இந்த நிலையில் பகலில் சிறிது நேரம் உறங்குவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், பகலில் தூங்கி எழுந்ததும் மீண்டும் பல் துலக்கச் செல்லும் அளவுக்கு உறங்குவது தான் பெரும் தவறு.
அதாவது பகல் நேரத்தில் மூன்று நான்கு மணி நேரம் உறங்குவது தவறல்ல.
ஞாயிறு அன்று ஓய்வு கிடைக்கிறது என்பதற்காக காலையும் மதியமும் அசைவ வகையறாக்களை ஒரு கை பார்த்துவிட்டு, மதியம் தொடங்கிய உறக்கம், சூரியன் அஸ்தமனம் ஆகும் இரவின் தொடக்கம் வரை நீளக் கூடாது. குறிப்பாக எண்ணெய் தேய்த்த நாளன்று பகல் உறக்கம் வேண்டவே வேண்டாம்.
பகல் நேரத்தில் நீண்ட நேர உறக்கம் தான் தவறே தவிர, சிறிது நேர உறக்கம் நிறைய நன்மைகளைக் கொடுக்கும். ‘Small nap…’ அதாவது சிறிய அளவிலான பகல் உறக்கம், நமது மூளை செல்களைப் புத்துணர்வூட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில நாடுகளில் மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்காகப் பகலில் சிறிது நேரம் உறங்க தனியாக நேரம் ஒதுக்கத் தொடங்கி இருக்கின்றன.
பகல் நேரத்தில் எடுக்கும் சிறிய ஓய்வு, நிறைய புதுமையான சிந்தனைகளையும், முடிவுகளை தீர்க்கமாக எடுக்கக்கூடிய திறனையும் கொடுக்கிறதாம்.
பகல் உறக்கம் குறித்த தெளிவு என்னவென்றால்… சோர்வாக இருக்கிறது எனில் பகல் நேரத்தில் தாராளமாக சிறிது நேரம் உறங்கலாம்.
அதுவே பகல் நேரத்தில் அடிக்கடி பெரு உறக்கம் எடுக்கும் பழக்கத்துக்கு அடிமையானால் காலப் போக்கில் உடல் நல பாதிப்புகளை நிச்சயம் சந்திக்க வேண்டியிருக்கும்.
மொத்தத்தில் பகல் நேரத்தில் அதிக தூக்கம் கூடாது. ஆனால், பகல் நேரத்தில் போடும் ஒரு குட்டித் தூக்கம் உங்களை சுறுசுறுப்பாக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: குதிகால் வெடிப்புகளை நீக்க ஈஸி வழி இதோ…
டாப் 10 செய்திகள் : பிரதமரின் மனதின் குரல் முதல் நீட் மறு தேர்வு முடிவு வரை!
சண்டே ஸ்பெஷல்: பிரியாணி… எப்போது, எப்படி, எந்தளவு சாப்பிடுவது நல்லது?
மேட்சை மாற்றிய அந்த கேட்ச்… டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா!