தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் இழிவாக பேசியதாக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மீது திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி வட்டத்திற்கு உட்பட்ட உலிபுரம் ஊராட்சியில் கடந்த 17ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் K.P. ராமலிங்கம் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளில் பேசினார். மேலும் இஸ்லாமியர்களையும் மிகவும் இழிவாக பேசினார்.
இதுதொடர்பாக கே.பி.ராமலிங்கம் பேசிய வீடியோ காட்சியோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜூன் 18ஆம் தேதி ஆத்தூர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், மாவட்ட பிரதிநிதியுமான ஸ்டாலின் தலைமையில் ஆத்தூர் காவல் சரக துணை கண் காணிப்பாளரை சந்தித்த திமுக நிர்வாகிகள், முதல்வரை அவதூறாக பேசிய K.P. ராமலிங்கம் மற்றும் மீது பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பாஜக மாவட்ட தலைவர் சண்முகநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞர்களும் டிஎஸ்பியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனால் எப்போது வேண்டுமானாலும் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏறி இறங்கும் தங்கம் விலை : இன்று எவ்வளவு தெரியுமா?
’அன்பு சகோதரர்’ ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ : ஸ்டாலின் ட்விட்!
