அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா நடிப்பில் வெளிவந்துள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் பல தடைகளைத் தாண்டி கடந்த 27ஆம் தேதி வெளியானது. skin care tips by veera dheera sooran vikram
மேலும் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறது வீர தீர சூரன் படக்குழு.
படம் வெளியான நாளன்று சென்னை சத்யம் திரையரங்கில், ரசிகர்களுடன் வீர தீர சூரன் 2 படத்தைப் பார்த்த விக்ரம், அதன்பின்னர் மதுரை, திருச்சி, கரூர் என பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக சேலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் இயக்குநர் அருண்குமாருடன் சென்று ரசிகர்களை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர், ‘சார் உங்களை மாதிரி இளமையாகவே இருக்க என்ன செய்யனும்?’ என்று விக்ரமிடம் கேள்வி எழுப்பினார்.
கழுதைப் பால் குடிங்க! skin care tips by veera dheera sooran vikram
அதற்கு விக்ரம், “வயதாவது நல்லது தான்” என்றார். மேலும் அவர், “எல்லா சனிக்கிழமைகளிலும் கழுதைப் பால் குடித்தால் வயதாகாமல் இருக்கலாம். முதலில் கழுதையை பிடிப்பது கடினம், அதன் பாலை எடுப்பது அதைவிட கடினம்” என்று விக்ரம் கூறினார்.
உண்மையில், கழுதைப் பால் புரதத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. மனித தாய்ப்பால் மற்றும் பசும்பாலுக்கு இணையான சத்துக்களை கொண்டது. கழுதைப் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கும், அதேவேளையில் மற்ற பால்களை விட அதிக வைட்டமின் D அதில் உள்ளது.
நகரங்களில் இன்று கழுதையை காண்பது அரிதாகி விட்ட சூழ்நிலையில், சந்தையில் கழுதை பால் பவுடர் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.