‘கத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் ராம்சரண் நடிக்கிறார். தெலுங்கு, தமிழில் உருவாகும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்ற கேள்வி, திரையுலகத்தில் கேட்கப்பட்டு வந்தது.
இறைவி, நெஞ்சம் மறப்பதில்லை என, முறையே கார்த்திக் சுப்புராஜ், செல்வராகவன் படத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, முருகதாஸ் படத்தில் நெகடிவ் ரோலில் நடிக்கிறார். தமிழில் படம் எடுத்து, தெலுங்கில் டப்பிங், ரீமேக் செய்வதற்கு நேரடி தமிழ், தெலுங்கு திரைப்படமாக எடுத்துவிடலாம் என்ற முடிவில், தமிழிலும் மார்க்கெட் வைத்திருக்கும் மகேஷ் பாபுவை ஹீரோவாக போட்டிருக்கிறார்கள். தெலுங்கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பல மகேஷ் பாபு படங்களின் வெற்றிதான் முருகதாஸின் இந்த முடிவுக்குக் காரணமாம்.