டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக 6.30 மணி நேரம் விசாரணை! நாளையும் தொடரும்!

Published On:

| By Mathi

CBI Karur Probe

41 பேரை பலி கொண்ட கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு, காவல்துறை அதிகாரிகளிடம் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 30) 2-வது நாளாக சுமார் 6.30 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே கரூரில் முகாமிட்டு 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

இதனையடுத்து தற்போது டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று (டிசம்பர் 29) சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடந்தது என்ன என்பதை நமது மின்னம்பலத்தில் விரிவாக பதிவு செய்துள்ளோம்.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன்; கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா உள்ளிட்டோர் இன்று காலை 10 மணிக்கு டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். இன்றும் விரிவான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்தினர். இன்று 2-வது நாளாக சுமார் 6.30 மணி நேரம் விசாரணை நடந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து நாளை டிசம்பர் 31-ந் தேதி 3-வது நாளாகவும் விசாரணை நடைபெற உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share