சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் இன்று (மே 9) ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான “ஸ்ரீ சுதர்சன்” பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலையில் இன்று வழக்கம்போல் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பட்டாசுகளுக்கு மருந்து நிரப்பும் பணி நடைபெற்ற போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருக்கும் 6க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இந்த வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும், வருவாய் துறையினரும் வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, மே 6ஆம் தேதி செங்கமலப்பட்டி அருகே உள்ள வேறொரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 2 நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் செங்கமலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக்கூடாது : சந்திரபாபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி