நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து,நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு சில காரணத்தினால் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது.
தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை டீசரை வெளியிட்டு படக்குழு உறுதி செய்தது. டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லையே என்று வருத்தப்பட்ட ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் விதத்தில் தீபாவளிக்கு SK 21 படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
SK21 படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 75 நாட்கள் நடைபெற்றது. தற்போது காஷ்மீர் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையக் கதையாக கொண்டு SK21 உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் SK21 படத்தின் டைட்டிலை வரும் தீபாவளி அன்று வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளதாகவும், படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
கேன் வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு: உலகக்கோப்பையில் தொடர்வாரா?