Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!

Published On:

| By Manjula

sivakarthikeyan sai pallavi sk 21 movie

தமிழ் சினிமாவின் ‘பிரின்ஸ்’ என ரசிகர்களால் புகழப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நாளை (பிப்ரவரி 17) தன்னுடைய 39-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

இதையொட்டி பிறந்தநாள் ஸ்பெஷலாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அவரின் 21-வது படத்தின் டைட்டில் மற்றும் டீசரை இன்று (பிப்ரவரி 16) வெளியிட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இப்படத்திற்கு ‘அமரன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய வேடங்களில் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் கதை இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என, நாம் முன்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

சிவகார்த்திகேயனுக்கு உடற்பயிற்சி அளித்த பயிற்சியாளர் சந்தீப்பும் சமீபத்திய பேட்டி ஒன்றில், ”இது இராணுவத்தை பின்னணியாகக் கொண்ட பயோபிக் கதை தான்”, என இந்த தகவலை உறுதி செய்திருந்தார் .

தற்போது படக்குழுவினரும் அதிகாரப்பூர்வமாக இது மேஜர் முகுந்த் வரதராஜனின் கதைதான் என்பதை உறுதி செய்துள்ளனர். இராணுவ வீரர் தோற்றத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையாக உழைத்துள்ளார் என்பது டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

AMARAN TEASER | Ulaganayagan Kamal Haasan | Sivakarthikeyan | Rajkumar | GV Prakash | R. Mahendran

அமரன் டீசரை பார்த்த ரசிகர்களும் படத்தின் மீதான தங்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/AjaiInith/status/1758457033890656741

இதனால் தற்போது ட்விட்டரில் #SK21TitleTeaser மற்றும்#Sivakarthikeyan ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம்: கட்சிகள் என்ன சொல்கின்றன?

சைரன் – திரை விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share