ADVERTISEMENT

சிவகார்த்திகேயனின், ‘குரங்கு பெடல்’…. டீசர் எப்படி?

Published On:

| By Manjula

சின்னத்திரை தொகுப்பாளராக தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகராக மட்டும் இன்றி, தயாரிப்பாளராகவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தனது SK புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.

ADVERTISEMENT

கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் ராஜின் அடுத்த படமான கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கமலக்கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் படம் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், ரத்தீஷ், சாய் கணேஷ், ஜென்சன் திவாகர் உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) குரங்கு பெடல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

சைக்கிள் வாங்க ஆசைப்படும் ஒரு சிறுவன், அவனது குடும்ப சூழ்நிலை, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள அந்த சிறுவன் எடுக்கும் முயற்சிகள் என, கிராமத்து பின்னணியில் குரங்கு பெடல் படத்தை இயக்கியிருக்கிறார் கமலக்கண்ணன்.

Kurangu Pedal - First Look Teaser | Sivakarthikeyan | Kamalakannan |Ghibran Vaibodha |SK Productions

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது போல, குரங்கு பெடல் படத்திற்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கார்த்திக் ராஜா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலக புத்தக நாள் 2024 : 10 ஆளுமைகளை சந்திக்கலாமா?

Video: ‘பிரியாணிக்கு வெயிட்டிங்’… மீண்டும் கவனம் ஈர்த்த விஷால்

தேர்தலுக்கு பிறகு செல்போன் கட்டணம் 15 – 17 சதவீதம் உயரும்” : பகீர் ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share