நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் பிரின்ஸ் படத்தின், ”பிம்பிளிக்கி பிலாப்பி” முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
டான் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் கேவி இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடிக்கின்றார். மேலும் சத்தியராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 1) பிரின்ஸ் படத்தின் முதல் பாடல் “பிம்பிளிக்கி பிலாப்பி” என்னும் பாடல் வெளியாகியுள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை, அனிருத் ரவிச்சந்திரன் உடன் ரம்யா பெஹாரா, சஹிதி சகாந்தி பாடியுள்ளனர்.
பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்குத் திரைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் தமிழ் மொழி வெளியீட்டு உரிமையைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் கைப்பற்றியுள்ளார்.
டான், டாக்டர் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்ததால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மோனிஷா
’’அந்த மகாலட்சுமியே கிடைச்சா…’’ திருமணம் குறித்து ரவீந்திரன்
