நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு காரணமாக பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் அவரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பெருங்களத்தூரில் இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது.
பெருங்களத்தூர் பகுதியில் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தில் தான் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பாலத்தின் மேல் இருந்து சிவகார்த்திகேயன் குதிப்பது போன்ற காட்சிகளை இன்று காலை முதல் படக்குழுவினர் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் சிவகார்த்திகேயன் சூட்டிங்கை பார்க்க அப்பகுதியில் மக்கள் திரண்டுள்ளனர்.
இதனால் வாகனங்கள் அப்பகுதியை மெதுவாக கடந்து செல்வதால் நெடுங்குன்றம், வண்டலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விடுதலை – 2 : முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மனநலம் பாதிச்சிருச்சு, படத்தை பார்த்து கத்திய ரசிகர்!- கங்குவா கதறல்கள்!
