நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் மிக தீவிரமான ரசிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான அவரது ‘டான்’ படத்தில் கூட நிறைய வசனங்களும், காட்சிகளும் ரஜினிகாந்த் போலவே நடித்திருப்பார்.
இந்நிலையில், அவரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘இந்திய சினிமாவின் ‘டான்’ உடன் உள்ளேன்.
ரஜினிகாந்த் சாரை சந்தித்து அவரது ஆசியை பெற்றேன். அவருடன் இருந்த அந்த அறுபது நிமிடங்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று ஆகும்.
மிக்க நன்றி தலைவா உங்களது நேரத்திற்கும் ‘டான்’ படத்தை பற்றி கூறிய மதிப்புமிக்க கருத்துகளுக்கும்’ என மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே, ‘டான்’ படம் வெளியான சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி தொலைபேசியில் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அதற்காக ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.
இப்போது சிவகார்த்திகேயனின் 20ஆவது படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**









