தளபதி வழியில் சிவகார்த்திகேயன்… மரண மாஸ் தகவல் வெளியானது!

Published On:

| By Manjula

sivakarthikeyan venkat prabhu

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK 23’ படத்தை முருகதாஸ் இயக்கி வருகிறார். மேலும் அவரது நடிப்பில் ‘அமரன்’ திரைப்படமும் ரிலீசுக்குத் தயாராகி வருகிறது.

பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்ற தரமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

sivakarthikeyan venkat prabhu

இந்தநிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது படத்தை பற்றிய மாஸ் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரைப்படமாக ‘SK 25’ இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

sivakarthikeyan venkat prabhu

எப்போதுமே தளபதி வழியில் செல்லும் சிவகார்த்திகேயன் இப்பொழுதும் வெங்கட் பிரபுவை இயக்குனராக தேர்வு செய்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

-பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயிலர் 2 டைட்டில் இதுதான்?… வெளியான புதிய தகவல்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: தால் இட்லி

IPL 2024 : வீறுநடை போட்ட லக்னோ… சொந்த மைதானத்தில் வீழ்த்திய டெல்லி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share