‘அயலான்’ அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

Published On:

| By Jegadeesh

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பான் இந்தியா படமான அயலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT

மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்க, வில்லனாக மிஷ்கின் நடித்துள்ளார். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று(ஏப்ரல்24) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதன்படி அயலான் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். அதில் ஏலியன் உடன் சிவகார்த்திகேயன் பறந்து செல்வது போல் புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சுமார் 6 ஆண்டு இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?

செட்டிநாடு குழுமத்தில் ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share