பொங்கல் ரிலீஸ் உறுதி : விஜய்யின் கடைசி படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன்… இத கவனிச்சீங்களா?

Published On:

| By christopher

Sivakarthikeyan clash with jananayagan on pongal26

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில் அடுத்தாண்டு 2026 பொங்கலுக்கு ரிலீசாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கப்பட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் அதே பொங்கல் விடுமுறையை குறிவைத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தை ஜனவரி 14 அன்று ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனை உறுதி செய்யும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ வீடியோவை இன்று (செப்டம்பர் 12) வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், பராசக்தி படத்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

அதே வேளையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு எழுந்துள்ள நிலையில், பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவிக்கலாம் என்றும், அப்போது தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி பொறுப்பு வகிக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதால், தியேட்டர் எண்ணிக்கை குறித்து கவலைப்படவே தேவையில்லை என சிவகார்த்திகேயனின் மற்றொரு தரப்பு ரசிகர்கள் அடித்து கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share