அமரன் டீமுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!

Published On:

| By Kavi

மாவீரன், அயலான் என அடுத்தடுத்த வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிச்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து அமரன் படத்தை தயாரித்துள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள அமரன் படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அமரன் படத்திற்கான படப்பிடிப்பு 75 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் மற்ற காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமரன் படக் குழுவிற்கு சிவகார்த்திகேயன் ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

இன்னும் ஒரு சில நாட்களில் அமரன் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதால், அமரன் பட குழுவினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பட குழுவினருக்கு சிவகார்த்திகேயன் தன் கையாலேயே பிரியாணி பரிமாறி ஒவ்வொருவரையும் உபசரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

#Sivakarthikeyan's Biryani Treat to #Amaran Team..❣️🤝

சிவகார்த்திகேயன் படக் குழுவினருக்கு பிரியாணி பரிமாறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமரன் படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!

மேதகு ஆளுனருக்கோர் மித்திரக் கடிதம் !

கிச்சன் கீர்த்தனா: கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share