சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை… ஆராதனா, குகன் ஹேப்பி!

Published On:

| By Selvam

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றிய சிவகார்த்திகேயன், மெரினா, 3, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ADVERTISEMENT

கடந்த 2010-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா, குகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது தந்தையின் நினைவாக மகனுக்கு குகன் தாஸ் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பதிவில், “எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’… காரணம் இதுதான்!

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share