யாரு விக்ரம் பிரபு தானே.? அவர்தான் பதிமூன்று வருடம் முன்னாலேயே கும்கியில் அறிமுகமாகி விட்டாரே என்று சொல்லக் கூடாது . அவர் பிரபுவின் மகன்.
இப்போது சினிமாவுக்கு வருவது பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மகன் தர்ஷன் கணேசன்.(நடிகர் திலகத்தின் நிஜப் பெயர் இப்போது குடும்பப் பெயராக ஆகி இருக்கிறது)
சத்ய ஜோதி பிலிம்ஸ். டி. ஜி. தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘லெனின் பாண்டியன்’ டி. டி. பாலச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தில்தான் தர்ஷன் நடிகராக அறிமுகமாகிறார் . படத்தில் மிக முக்கிய வேடத்தில் கங்கை அமரன் நடிக்கிறார் என்று முன்பே பார்த்தோம் . நடிகையும் ‘ச்சாலா பெத்த ‘அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மலர்கிறார்.
ஸ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுப்பு பஞ்சு ஆகியோர் நடிக்கின்றனர்.இசை சந்தோஷ் நாராயணன்
தர்ஷன் கணேசனை ரஜினிகாந்த் தனது வீட்டுக்கு வரவழைத்து வாழ்த்தி இருக்கிறார் .
சிவாஜியின் பேரனை சிவாஜி ராவ் வாழ்த்துவது பொருத்தம் தானே?
— ராஜ திருமகன்
