சிவகங்கை மாவட்டம் அழகமாநேரி கிராமத்தில் உள்ள தோப்பு வீட்டில் திருட முயன்ற இருவரை அப்பகுதி மக்களே தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட அழகமாநேரியில் சுப்பு என்பவர் தனது தோப்பில் வீடுகட்டி வசித்து வந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் இரண்டு பேர் தோப்பு வீட்டில் ஆடு, கோழி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்துள்ளனர்.
அப்போது அழகமாநேரியைச் சேர்ந்த திருப்பதி, சேர்மராஜா இருவரும் அவர்களை பார்த்ததும் ‘திருடன்… திருடன்…’ என்று சத்தம்போட்டனர். sivaganga people killed two persons
உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த 20 பேர் அங்கு கூடினர். அவர்கள் திருட முயன்றவர்களை கல் மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள் சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை மாவட்டம் கல்லம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பது தெரியவந்தது.
அவர்களின் டூ வீலரை காவல்துறையினர் மீட்டு மதகுப்பட்டி காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றனர். உயிரிழந்தவர்களும், அவர்களை தாக்கியவர்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் ஏற்படாத சூழல் நிலவுகிறது
திருட முயன்றவர்களை தாக்கி கொலை செய்த கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. sivaganga people killed two persons