Kanguva Teaser: ‘வெறித்தனம்’ காட்டும் சூர்யா… ‘சும்மா தெறிக்குது’ கொண்டாடும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘கங்குவா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா. இதில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி, பாபி தியோல் நடித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

முதன்முறையாக 10 மொழிகள், மிகப்பெரிய பட்ஜெட் என சூர்யாவின் கேரியரில், அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் ‘கங்குவா’ திரையரங்குகளில் 3டி முறையில் வெளியாகவிருக்கிறது.

ADVERTISEMENT

படத்தின் டப்பிங் மற்றும் விஎப்எக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக வந்திருப்பதால் இரண்டாவது பாகத்தினையும் எடுக்க முடிவு செய்து அதற்காக படக்குழு மூன்று நாட்கள் ஷூட்டிங்கும் நடத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘கங்குவா’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிக்கொளுத்தி வருகின்றனர்.

குறிப்பாக ‘பெருமாச்சி’ என சூர்யா கத்தும்போது பார்க்கும் நமக்குமே மெய் சிலிர்த்துப் போகிறது. டீசர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்திருப்பதால், ”உண்மையிலேயே டீசர் தீயாக இருக்கிறது”, ”சிவாவிடம் இருந்து நிச்சயமாக இப்படி ஒரு வெறித்தன டீசரை எதிர்பார்க்கவில்லை”, என ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த பாராட்டு மழையால் சமூக வலைதளங்களில் #KanguvaSizzle என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

சிஏஏ சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலைக்கு எதிராக போட்டியா? பெண் தொழிலதிபர் விளக்கம்!

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share