SIR: விண்ணப்ப படிவங்கள் ஒப்படைக்க நாளை கடைசி நாள்- 99.55% ஆன்லைனில் பதிவேற்றம்

Published On:

| By Mathi

SIR Election Commission

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,99,72,687 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,95,77,592 கணக்கெடுப்பு படிவங்கள் (99.97%) இதுவரை (2025 டிசம்பர் 9) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,33,096 வாக்குச் சாவடி அலுவலர்கள், 12,43,716 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,40,84,624 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,38,25,877 (99.55%) கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,21,566 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,21,204 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வாக்காளர்களிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்குச் சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க டிசம்பர் 11-ந் தேதி கடைசி நாள்; டிசம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share