இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தத்தில் அடுத்த 10 நாட்களில் 50% விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டிய நிலை உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது.
அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,50,24,723 கணக்கெடுப்பு படிவங்கள் (99.07%) இதுவரை (2025 நவம்பர் 24) விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி அலுவலர்கள், 11,40,598 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,16,90,765 கணக்கெடுப்பு படிவங்கள் (96.22%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 3,19,70,385 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,38,853 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 9,76,431 படிவங்கள் (95.58%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5,96,288 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியாக நிலவரம்:
அந்தமான் நிக்கோபர்
- வாக்காளர்கள்: 3,10,404
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 3,10,346 (99.98%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 1,71,440 (55.23%)
சத்தீஸ்கர்
- வாக்காளர்கள்: 2,12,30,737
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 2,10,51,685 (99.16%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 1,02,02,682 (48.06%)
கோவா
- வாக்காளர்கள்: 11,85,034
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 11,85,016 (100.00%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 9,11,135 (76.89%)
குஜராத்
- வாக்காளர்கள்: 5,08,43,436
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 5,06,88,012 (99.69%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 3,00,04,225 (59.01%)
கேரளா
- வாக்காளர்கள்: 2,78,50,855
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 2,71,08,287 (97.33%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 66,05,713 (23.72%)
லட்சத்தீவுகள்
- வாக்காளர்கள்: 57,813
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 57,813 (100%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 55,970 (96.81%)
மத்திய பிரதேசம்
- வாக்காளர்கள்: 5,74,06,143
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 5,73,10,509 (99.83%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 3,74,12,781 (65.17%)
புதுச்சேரி
- வாக்காளர்கள்: 10,21,578
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 9,76,431 (95.58%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 5,96,288 (58.37%)
ராஜஸ்தான்
- வாக்காளர்கள்: 5,46,56,215
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 5,43,59,745 (99.46%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 3,94,63,394 (72.20%)
தமிழகம்
- வாக்காளர்கள்: 6,41,14,587
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 6,16,90,765 (96.22%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 3,19,70,385 (49.86%)
உத்தரப் பிரதேசம்
- வாக்காளர்கள்: 15,44,30,092
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 15,38,38,108 (99.62%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 4,10,82,866 (26.60%)
மேற்கு வங்காளம்
- வாக்காளர்கள்: 7,66,37,529
- விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 7,64,48,006 (99.75%)
- பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்கள்: 4,28,98,350 (55.98%)
மொத்தம்
மொத்த வாக்காளர்கள்: 50,97,44,423
விநியோகிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்: 50,50,24,723 (99.07%)
பதிவேற்றப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்: 24,13,75,229
அடுத்த 10 நாட்களில் சுமார் 50% விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்; தற்போதைய நிலையில் இது சாத்தியமாகுமா? என கேள்வி எழுப்புகின்றன அரசியல் கட்சிகள்.
