சங்கீதம் கற்றுக் கொள்பவர்களுக்கு சென்னை ஐஐடியைப் போல நாடு முழுவதும் ஐஐடிக்களில் 500 சிறப்பு இடஒதுக்கீடு இடங்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை பாரதிய வித்யாபவன் சார்பில் நேற்று நவம்பர் 20-ந் தேதி நடைபெற்ற மார்கழி மகா உற்சவ நிகழ்சியில் காமகோடி பேசியதாவது: போன வருஷத்தில் இருந்து சின்ன வயசுலே இருந்து சங்கீதம் படிக்கிற குழந்தைகளுக்கு பி.டெக் அட்மிஷனில் ‘கோட்டான்னு’ சொல்லலை.. Fine Arts and Culture Excellence அட்மிஷன்னு சொல்லி இருக்கிறோம்..
இந்த வருஷம் மொத்தம் 7 ஆர்ட்டிஸ்ட்டு பிடெக்கில் ஜாயின் பண்ணியிருக்கா..
JEE படிக்கிறதுக்காக 9-வதிலேயே பாட்டை நிறுத்திட்டாள்னா.. அந்த கலையை கொலை பண்றதுக்கு எங்க JEE ரெஸ்பான்சிபலா இருக்க வேண்டாம்.. பாட்டு படிச்சாலும் JEE-ல் ரொம்ப மார்க் எடுக்காட்டியும் உங்களுக்கு (சங்கீதம் படிப்பவர்களுக்கு) பிரிபெரன்ஸ் கொடுக்கிறோம்.
அதனால நிறைய பேரண்ட்ஸ் இருக்கேள்.. தாத்தா பாட்டிகள் இருக்கேள்.. உங்க குழந்தைகள், பேரன் பேத்தி நன்னா பாடினா JEE-க்காக நிறுத்த வேண்டாம்..நல்லா பாட சொல்லுங்கோ.. பின்னாடி ஐஐடி மெட்ராஸில் ஜாயின் பண்றதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு.. மற்ற ஐஐடிக்கும் இதை கேம்பெயின் பண்ணிட்டு இருக்கோம்..
இந்த வருஷம் ஐஐடியோட கவுன்சில்ல நான் பிரசன்டேசன் கொடுக்கிறப்போ, சங்கீதம் படிச்சவாளை பிடெக் சேர்த்தா நல்ல எபெக்ட் இருக்கு..அதனால ஐஐடி மெட்ராஸ் மாதிரி எல்லா ஐஐடியும் ஃபாலோ அப் பண்ணனும்.. 23 ஐஐடியும் ஃபாலோ அப் செஞ்சா கிட்டதட்ட 500 சீட் கிடைக்கும்..
மியூசிக்கல் மேத்ஸ்னு ஒரு படிப்பை கொண்டுவரப் போகிறோம்.. சங்கீதத்தையும் கணக்கையும் இணைத்து இந்த பாடத்தை கொண்டுவரப் போகிறோம். இவ்வாறு காமகோடி கூறினார்.
மாடுகளின் சிறுநீரான கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என பேசி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர் ஐஐடி இயக்குநர் காமகோடி என்பது குறிப்பிடத்தக்கது.
