முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் உண்டு.. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். அப்படி எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பது பற்றிய எளிய மருத்துவக் குறிப்புகள் இதோ…
சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி வரலாம்.
திருநீற்றுப் பச்சிலையின் சாற்றைப் பூசலாம்.
முல்தானிமிட்டிப் பொடியை பன்னீரில் கலந்து தடவலாம்.
சந்தனத் தூளைப் பன்னீரில் இழைத்துப் பூசலாம்.
சந்தனத் தூளோடு தயிர், எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து தடவலாம்.
தக்காளித்துண்டு கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்து அதையே தடவலாம்.
கற்றாழைச் சோற்றை நன்கு கழுவிய பின் முகத்தில் தடவலாம்.
அறுகம்புல் பொடியுடன், குப்பைமேனி இலையின் பொடியைச் சம அளவு சேர்த்து நீரில் கலந்து தடவலாம்.
உருளைக்கிழங்கை அரைத்துப் பூச, பருக்களால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாகும்.
சங்கை நீரில் அல்லது பன்னீரில் இழைத்து முகப்பருவின் மீது பூசலாம்.
நம்பகமான நாட்டுமருந்துக் கடைகளில் சருமத்தில் பயன்படுத்துவதற்கான சங்கு என கேட்டால் தருவார்கள். பால் சங்கு, ஊது சங்கு என எந்த வகை சங்காக இருந்தாலும் பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் பருக்களைப் போக்கும் தன்மை உண்டு. சங்கு பற்பம் என்றும் கிடைக்கும். அதையும் பயன்படுத்தலாம். பற்பமாகப் பயன்படுத்துவதானால் அதன் தூய்மை, தரம் போன்றவற்றை உறுதி செய்த பிறகு வாங்கி பயன்படுத்தலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டிகர் தேர்தல் – ஜனநாயக படுகொலை : உச்ச நீதிமன்றம் காட்டம்!
பாஜக 370 இடங்களில் வெல்லும் : மோடி உறுதி!
Video: ”நீ விதைத்த வினை எல்லாம்” கேப்டனை பழி வாங்கிய இளம்வீரர்