இந்திய சினிமாவின் ’இசைஞானி’ என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக போகிறது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார் என்றும், கனெக்ட் மீடியா நிறுவனம் மற்றும் மெர்குரி மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும், 2025 ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இளையராஜாவின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தில்,
இளையராஜா – ஏ.ஆர். ரகுமான் இருவரும் சந்தித்துக் கொண்ட சில தருணங்களும் முக்கிய காட்சிகளாக படத்தில் இடம் பெறுவதாக ஓர் தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த காட்சிகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இளையராஜாவாக நடிகர் தனுஷும் ஏ.ஆர்.ரகுமான் ஆக நடிகர் சிம்புவும் திரையில் தோன்றினால் அந்த காட்சி வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.
தமிழ் திரையுலகில் சக போட்டியாளர்களாக பார்க்கப்படும் நடிகர் தனுஷும் நடிகர் சிம்புவும் இணைந்து நடிப்பார்களா..? என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
ஆனால் தமிழ் சினிமாவில் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க தொடங்கி விட்டதால் நிச்சயம் தனுஷ் – சிம்பு காம்போ ஒர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!
Bigg Boss 7 Day – 53 ; தினேஷுக்கு எதிராக திரும்பும் ஹவுஸ்மேட்ஸ்!
