வரலாற்று உச்சம்! கிலோ 3 லட்சத்தைத் தாண்டியது வெள்ளி… தங்கம் விலையும் எக்கச்சக்க உயர்வு!

Published On:

| By Santhosh Raj Saravanan

silver crosses 3 lakh mark gold price hits new high mcx market updates tamil

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம், நடுத்தர வர்க்க மக்களையும், நகைப்பிரியர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தியச் சந்தையில் வெள்ளியின் விலை ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல, தங்கத்தின் விலையும் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கிடுகிடுவென உயர்ந்த வெள்ளி: எம்.சி.எக்ஸ் (MCX – Multi Commodity Exchange) இணையதளத் தகவல்களின்படி, இன்று (திங்கட்கிழமை) வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே வெள்ளியின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. பிப்ரவரி மாதத்திற்கான வெள்ளி ஃப்யூச்சர்ஸ் (Silver Futures) விலை சுமார் 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம், ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹3,01,315 என்ற இமாலய இலக்கைத் தொட்டுள்ளது.

இந்திய ஃப்யூச்சர்ஸ் சந்தையில் வெள்ளி விலை 3 லட்சத்தைத் தாண்டுவது இதுவே முதல் முறை என்பதால், சந்தையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தங்கம் விலையும் ‘ஷாக்’: வெள்ளி மட்டுமல்ல, தங்கத்தின் விலையும் இன்று விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கம் விலை 2 சதவீதம் உயர்ந்து, புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

பிப்ரவரி மாதத்திற்கான தங்கம் ஃப்யூச்சர்ஸ் விலை, 10 கிராமுக்கு ₹1,45,500 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது, ஒரு சவரன் தங்கம் வாங்குவதற்கே சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

காரணம் என்ன? சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திருமண சீசன் நெருங்கி வரும் வேளையில், தங்கம் மற்றும் வெள்ளியின் இந்தத் திடீர் விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அத்தியாவசியத் தேவைக்காக நகை வாங்குபவர்களுக்கு இது பெரும் சுமையாகவே இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share