சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Selvam

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்தநிலையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேரள அரசு நிறுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 23) கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தி யாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் இப்பணியினை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புனே: கார் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பனிஷ்மென்ட் இதுதான்!

ஆர்சிபி இப்படி செய்யக்கூடாது: அட்வைஸ் சொன்ன அம்பத்தி ராயுடு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share