’நீ தான்யா சிங்கம்’ : விராட்கோலிக்கு சிம்பு ரிப்ளை!

Published On:

| By christopher

silambarasan thug reply to virat kohli

நடப்பு ஐபில் தொடரில் அதிக வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. silambarasan thug reply to virat kohli

அந்த அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வென்று 14 புள்ளிகள் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

பெங்களூரூ சின்னசாமி மைதானத்தில் வரும் 3ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது ஆர்.சி.பி.

இந்த நிலையில் அந்த அணியின் மூத்த வீரரான விராட் கோலியிடம் ‘தற்போது எந்த பாட்டை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதற்கு அவர், நான் சொன்னால் அதிர்ச்சியடைவீர்கள்… ’நீ சிங்கம் தான்’ பாடலை தான் நான் இப்போது அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த பாடல் பின்னணியில் விராட் கோலியின் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது ஆர்சிபி அணி நிர்வாகம்.

ADVERTISEMENT

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்துதல படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ‘நீ தான் சிங்கம்’ என விராட் கோலியை டேக் செய்து வாழ்த்தியுள்ளார் சிம்பு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share