’இவங்க ரெண்டு பேர் நடுவுல நின்னுகிட்டு…’ தக் லைஃப் ஷூட்டிங்… சிம்பு சொன்ன சுவாரசிய சம்பவம்!

Published On:

| By christopher

silambarasan shares about thuglife exp with kamal aned mani

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடலுக்கு ஆடியது குறித்து கமல் – சிம்பு இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். silambarasan shares about thuglife exp with kamal aned mani

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற்ற மணிரத்னம், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இன்று வெளியான ஜிங்குச்சா பாடல் திருமண கொண்டாட்டத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டை எழுதி, படத்திலும் அதற்கு சிம்புடன் இணைந்து நடனமாடியிருக்கிறார் கமல்ஹாசன்.

இதுகுறித்து சிம்பு பேசுகையில், “எனக்கு முதல்ல ஆச்சரியமாக இருந்துச்சு. தனியாக கமல் சார்கூட நடிக்கிறது கஷ்டம். இது மணி சாரும் கூட இருக்காரு. எனக்கு மட்டுமல்ல என் கூட நடிச்ச த்ரிஷா, அசோக், ஜோஜு எல்லோருக்கும் அப்படி தான் இருந்தது.

ADVERTISEMENT

கமல் – மணி சார் ரெண்டு பேரும் பேசும்போது நான் நடுவுல நிற்பேன். ஆனால் இவங்க ரெண்டு பேரும் பக்கத்துல இருந்து கவனிச்சேன். இந்த வாய்ப்புக்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக பார்க்கிறேன்.

கமல் சார் மிகப்பெரிய டான்சர். அவரைப் பார்த்து தான் நான் டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். ஜிங்குச்சா பாடலுக்கு கமல் சார் ரிகர்சல் பெருசா பண்ணல. ஆனால் இந்தப் பாடலுக்கான டேக் வந்ததும் மிரட்டிட்டாரு. இத்தனைக்கும் அவர் போட்டிருந்த உடை ரொம்ப கனமா இருந்தது. அதை போட்டுக்கொண்டு டான்ஸ் பண்றது கஷ்டம். ஆனா, சார் மிரட்டிட்டாரு” என்று பேசினார்.

அப்போது குறுக்கிட்ட கமல், “இந்த பாட்டு ஷூட் அப்போ உண்மையாக என்ன நடந்துச்சுனு மணிக்கு தான் தெரியும். இந்தப் பாட்டுக்கு சிம்பு ஆடிக்கொண்டிருந்தார். அப்போ மணி கிட்ட, ’ஷாட் சூப்பராக இருக்கு எடுங்க’னு சொன்னேன். அவர் நீங்க இந்தப் பாடல்ல இருக்கீங்க, இறங்கி ஆடுங்க’னு சொன்னாரு.

நான் சிம்புவோட டான்ஸ் எல்லாம் பார்த்துருக்கேன். அதனால சிம்புவோட ராட்சச எனர்ஜிக்கு, கொஞ்சமாவது ஈடு கொடுக்கணும்னுதான் இந்தப் பாடல்ல எனர்ஜியைக் கொடுத்தேன்” என கமல் பேசினார்.

Jinguchaa - Lyrical | Thug Life | Kamal Haasan | Mani Ratnam | STR | AR Rahman | RKFI | MT | RG

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share