விமர்சனம்: சிக்கந்தர்!

Published On:

| By uthay Padagalingam

Sikandar Movie Review in Tamil 2025

சல்மான் கான் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றியா? Sikandar Movie Review in Tamil 2025

அமீர்கானை நாயகனாகக் கொண்டு இந்தியில் ’கஜினி’ படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் தொடர்ச்சியாக, அவரது இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ’கஜினி’யின் இந்தி ரீமேக் 2008இல் வெளியானது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு அது நிகழ்ந்திருக்கிறது. சல்மான் கான் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான ‘சிக்கந்தர்’ இப்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

சிக்கந்தர்’ எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது? சல்மான் – முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றி கிட்டியதா? Sikandar Movie Review in Tamil 2025

ராஜாவின் கதை! Sikandar Movie Review in Tamil 2025

குஜராத்திலுள்ள ராஜ்கோட் அரண்மனை வாரிசான சஞ்சய் (சல்மான் கான்) தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர். அவரது மனைவி சாய்ஸ்ரீயும் (ராஷ்மிகா மந்தனா) அப்படிப்பட்டவர்தான். Sikandar Movie Review in Tamil 2025

வயது வித்தியாசம் இருந்தாலும் சஞ்சயின் ஆளுமையைப் பார்த்து வியந்து திருமணம் செய்துகொண்டவர் சாய்ஸ்ரீ. அதனால், அவருக்கு வரும் ஆபத்துகளைத் தடுத்து நிறுத்துவதையே முதன்மைப் பணியாகக் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் விமானத்தில் ஒரு முன்னாள் நடிகையிடம் மோசமாக நடக்க முயற்சிக்கிறார் அர்ஜுன் (பிரதீக் பப்பர்). இவர், மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் ராகேஷ் பிரதானின் (சத்யராஜ்) மகன். அப்போது, அவரையும் அவரது பாதுகாவலர்களையும் ’செமத்தியாக’ கவனிக்கிறார் சஞ்சய். இந்த விஷயம் ராகேஷின் காதுகளை எட்டுகிறது.

அதற்குப் பழிவாங்க, போலீஸ் அதிகாரி பிரகாஷை (கிஷோர்) ராஜ்கோட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ராகேஷ். ஆனால், அவரால் சஞ்சயைக் கைது செய்ய முடியவில்லை.

பிறகு, சஞ்சயைக் கொல்லச் சில முயற்சிகள் நடக்கின்றன. அதில் இருந்து அவரைக் காப்பாற்றுகிறார் சாய்ஸ்ரீ. ஆனால், அப்படியொரு சம்பவத்தில் காயப்பட்டுத் தன் உயிரை இழக்கிறார். Sikandar Movie Review in Tamil 2025

சாய்ஸ்ரீயின் இழப்பில் இருந்து மீள முடியாமல் சில மாதங்கள் தவிக்கிறார் சஞ்சய். ஒருநாள், உடலுறுப்பு தானத்தைச் செய்த தனது மனைவியின் நினைவைப் போற்றும் வகையில், அதனால் பலன் அடைந்தவர்களைக் காணச் செல்கிறார். அவர்களிடத்தில் தன்னுடைய அடையாளத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. Sikandar Movie Review in Tamil 2025

மும்பை தாராவியில் வசிக்கும் கமருதீன், வைதேகி (காஜல் அகர்வால்) மற்றும் நிஷா ஆகியோரை நேரில் சந்திக்கிறார் சஞ்சய். வந்த வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்ப முயற்சிக்கும்போது அர்ஜுன் பார்வையில் அவர் விழுகிறார்.

அவரது காரை துரத்துகிறார் அர்ஜுன். அவர் மீது தாக்குதல் நடத்துகிறார். அப்போது நிகழும் விபத்தில் உயிரிழக்கிறார். Sikandar Movie Review in Tamil 2025

நடந்த விஷயம் ராகேஷுக்கு தெரிய வருகிறது. மகனை இழந்த வருத்தத்தில் கொதிக்கும் அவர், ‘சஞ்சய் இனி நிம்மதியாக வாழக் கூடாது’ என்று பொருமுகிறார்.

அதன்பிறகு என்னவானது? மும்பையில் சஞ்சயை போலீசாரால் கைது செய்ய முடிந்ததா? மனைவியை இழந்த சஞ்சய் தன்னிலையை எப்படி மேம்படுத்திக் கொண்டார் என்று சொல்கிறது ‘சிக்கந்தர்’ படத்தின் மீதி. Sikandar Movie Review in Tamil 2025

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்று ஜனநாயகத்தை வலியுறுத்தும்விதமாக அறுபதுகளிலேயே அரச கதையைப் படமாக எடுத்தது தமிழ் திரையுலகம். அதனைச் சேர்ந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் இரண்டாவதாக இயக்கும் இந்திப் படத்தில் ராஜ குடும்பத்து வாரிசுவிடம் விசுவாசத்தைக் கொட்டும் மக்களைக் காட்டுகிறார். ‘இது பழைய திரைப்படங்களை விட மிக பழையதாக உள்ளது’.

‘இது போன்ற ராஜாவை வேறு எங்கும் காண முடியுமா’ என்பது போல அப்பாத்திரத்தின் நாயகத்தன்மையைத் திரையில் காட்டியிருக்கிறார். அதனை ஏற்க முடிந்தவர்களால் மட்டுமே இந்த ‘சிக்கந்தரை’ காண முடியும்.

முடிச்சு விட்டீங்க போங்க..! Sikandar Movie Review in Tamil 2025

வானத்தில் பறக்கும் விமானத்தில் ஒரு முன்னாள் ‘போர்ன்’ பட நடிகையிடம் பெரிய இடத்து வாரிசு ஒருவர் வம்பிழுப்பதாகத் தொடங்கும் திரைக்கதை ஈர்ப்பை உருவாக்குகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஹீரோயிச பில்டப்போடு சல்மான் முஷ்டி முறுக்குவதெல்லாம் கூட ஓகேதான்.  

ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு காட்சியிலும் ‘ராஜா யாரு தெரியுமா’ என்று வம்படியாகச் சல்மான் பாத்திரத்திற்கு ‘பில்டப்’ கொடுக்கும்போது கண்களில் பூச்சிகள் பறக்கின்றன. ஒருகட்டத்தில் அது மட்டுமே திரைக்கதையில் இருக்கிறது என்று தெரிய வரும்போது ‘ரீல் அந்துபோச்சுடா சாமி’ என்று நாம் அலற வேண்டியிருக்கிறது.

‘சிக்கந்தர்’ரில் உள்ள காட்சிகளின் அமைப்பும் காட்சியாக்கமும் பழைய படங்களை டிவியில் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகின்றன.

ரமணா, கஜினி, துப்பாக்கி தந்த ஏ.ஆர்.முருகதாஸா இந்த படத்தை இயக்கியது’ என்று நம்மை நாமே கிள்ளிக் கொள்கிற அளவுக்கே ‘சிக்கந்தர்’ திரைக்கதை இருக்கிறது.

மனைவி இழந்து சல்மான் சோகத்தில் தவிப்பது, அவர் தன்னருகே இருப்பது போன்ற பிரமையில் ஆழ்வது போன்ற இடங்கள் ‘கஜினி’யை நினைவூட்டுகின்றன.  

இதற்கிடையே, ‘உடலுறுப்பு தானம்’ பெற்றவர்கள் நிலை என்னவானது என்று அறிவதற்காக ராஜ்கோட்டில் இருந்து நாயகன் மும்பை சென்று இறங்குவதாகக் காட்டுவதெல்லாம் ‘ இப்பவே கண்ணை கட்டுதே’ என்று புலம்ப வைக்கின்றன.

இந்த படத்தைப் பார்க்கும் தீவிர சல்மான் ரசிகர்கள் ‘முடிச்சு விட்டீங்க போங்க..’ என்று முருகதாஸிடம் மன்றாடாமல் போனால் ஆச்சர்யம்தான்.

நடிப்பைப் பொறுத்தவரை, ’ஆளவந்தான்’ கமல் போலத் திரையில் தெரிகிறார் சல்மான் கான். சோகக் காட்சிகளில் சட்டென்று அவர் கண்ணில் நீர் துளிர்ப்பது எல்லாம் ஓகேதான். ஆனால், அதனைக் காணும் நமக்குத்தான் கண்ணீர் பெருக மாட்டேன் என்கிறது.

ராஷ்மிகா இந்த படத்தில் வருகிறார், போகிறார். அவர் பரவாயில்லை என்பது போல இதில் காஜல் அகர்வாலின் இருப்பு இருக்கிறது.

வில்லனாக சத்யராஜும் அவரது மகனாக பிரதீக் பப்பரும் நடித்திருக்கின்றனர். ‘தகடு தகடு’ பாணியில் சத்யராஜை வசனம் பேச வைத்திருக்கும் முருகதாஸ், அவருக்கு ‘இரவல் குரல்’ தரும் முடிவுக்கு வந்தது ஏனோ?

‘3 இடியட்ஸ்’ படத்தில் அமீர், மாதவனுக்கு இணையாக நாயகனாக வலம் வந்த ஷர்மான் ஜோஷி இதில் ‘ராஜாவே..’ என்று படம் முழுக்க சல்மான் கானுக்கு கூஜா தூக்கியிருக்கிறார்.

தமிழில் சில படங்களில் நாயகியாக உயர்ந்த தான்யா பாலகிருஷ்ணன், ‘கட்டளையிடுங்கள் ராணி’ என்று சொல்லாத குறையாக ராஷ்மிகாவுடன் திரையில் தோன்றியிருக்கிறார்.

இவர்களைத் தாண்டி நம் கண்ணில் படுவது கிஷோர் மட்டுமே. அவரைத் தவிர்த்துப் படத்தில் வரும் பல டஜன் நடிப்பு கலைஞர்கள் ஒரு ‘பிராப்பர்டி’யாக திரையில் தெரிகின்றனர்.

இந்த படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று, திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவு. இருளில் இருந்து ஒளி நோக்கி சல்மான்கான் நடந்து வரும் சில ஷாட்களில் அவரது உழைப்பு கண்களில் ஒற்றிக்கொள்ளும் ரகம்.

இதில் தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக சுப்ரதா சக்ரபர்த்தி, மந்தர் நகானோகர், அமித் ரே ஆகியோர் பணியாற்றியிருக்கின்றனர். அவர்களது பங்களிப்பு ஒவ்வொரு பிரேமையும் அழகானதாக மாற்றியிருக்கிறது.

விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பானது திரையில் படம் சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓட வேண்டுமே என்று மெனக்கெட்டிருக்கிறது.

இன்னும் சில தொழில்நுட்பங்களுக்காகப் பணியாளர்கள் சிலர் தமது உழைப்பைக் கொட்டியிருக்கின்றனர்.

இசையைப் பொறுத்தவரை பிரீதம் தந்திருக்கும் பாடல்கள் ‘ஓகே’ ரகம். அதனை ஈடு செய்யும்விதமாகப் பின்னணி இசையில் ‘தாண்டவம்’ ஆடியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். நிச்சயமாக, இந்த படம் அவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக அமையும்.

ஒரு நட்சத்திர நடிகரை எப்படித் திரையில் காட்டுவது என்பதில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பார்வை பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், அதனை நியாயப்படுத்தும்விதமான கதைக்கரு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் அமைய வேண்டும் என்பதை மறந்திருக்கிறார்.

சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னால் இப்படம் வந்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடியிருக்க வாய்ப்புண்டு.

‘கமர்ஷியல் திரைக்கதைகள்’ கூட ஒரே திசையில் பயணிப்பதோடு சீரான வேகத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை நிறைத்து நிற்கிறது இன்றைய சூழல். அந்த வகையில், ‘சிக்கந்தர்’ கடந்த காலத்திற்கான படைப்பாகவே அமைந்திருக்கிறது. இத்தனைக்குப் பிறகும் ‘சல்மான் – முருகதாஸ் கூட்டணிக்கு வெற்றியா’ என்று கேட்க நம் மனம் துணியாது.

இவ்வளவு கஷ்டப்பட்டு, பிரமாண்டமான முறையில் ‘ஹீரோயிசத்தை’ உயர்த்தி பிடிப்பதைக் காட்டிலும் மனதுக்குள் இயல்பாக முகிழ்க்கிற கதைகளைப் படமாக்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த படத்தின் ‘ரிசல்ட்’ அப்படியொரு முடிவு நோக்கி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை நகர்த்தினால் நன்றாகயிருக்கும்..! Sikandar Movie Review in Tamil 2025

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share