தமிழ் திரையுலகில் ரோமியோ ஜூலியட், தர்பார், ஆரம்பம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் ஸ்ரேயா குப்தா. மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர். sikandar fame shreya gupto on casting couch issue
தர்பாரை தொடர்ந்து தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரம்ஜானை முன்னிட்டு வெளியான சல்மான் கானின் சிக்கந்தர் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அவர் கால் பதித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்த ஸ்ரேயா குப்தாவிடம், காஸ்டிங் கவுச் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணம்!
அதற்கு அவர், “ நான் பொய் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய முதுகலை படிப்பை முடித்த பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு பிரபல இயக்குநரின் அலுவலகத்தில் நடந்த ஆடிஷனுக்கு எனது தாயாருடன் சென்றிருந்தேன். அப்போது நான் இயக்குநரின் அறைக்குள் நுழைந்ததும் அவர், ‘என் மடியில் வந்து உட்காரும்மா” என்றார்.
அதனை எதிர்ப்பார்க்காத நான், அவரிடம் ஏதேதோ சாக்குபோக்கு சொல்லி அங்கிருந்து வெளியேறினேன். அதன்பிறகு அங்கு செல்லவே இல்லை. திரைத்துறையை விட்டு சில காலம் விலகியும் இருந்தேன். நான் மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணம். அதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் இதுபோன்ற எதையும் நான் அனுபவிக்கவில்லை, அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்” என ஸ்ரேயா குப்தா தெரிவித்தார்.
சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான ஆபாச வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் காஸ்டிங் கவுச் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து நடிகைகள் ஷாலினி பாண்டே, பிரகதி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
அந்த வரிசையில் தற்போது ஸ்ரேயா குப்தாவின் காஸ்டிங் கவுச் தொடர்பான பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.