முடா முறைகேடு: சித்தராமையாவுக்கு சிக்கல்… விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Minnambalam Login1

siddaramaiah plea dismissed

முடா (MUDA) முறைகேடு வழக்கில் தனக்கு எதிராக வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லாட் அனுமதி கொடுத்ததற்கு எதிராக அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம்  இன்று (செப்டம்பர் 24) தள்ளுபடி செய்துள்ளது.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக நிலத்தை வழங்கியதற்கு சித்தராமையா உடந்தையாக இருந்துள்ளார். அதற்கு அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும் என்று கர்நாடகத்தை சேர்ந்த எஸ்.பி.பிரதீப் குமார், டி.ஜே.ஆப்கிரஹாம் மற்றும் ஸ்னேஹமயி கிருஷ்னா ஆகியோர், கர்நாடக ஆளுநரிடம் விண்ணப்பித்திருந்தனர்.

ADVERTISEMENT

ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் அதற்கு அம்மாநில ஆளுநரின் ஒப்புதல் தேவை. அதன்படி சித்தராமையாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை விசாரிக்க, ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லாட் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி, தனது ஒப்புதலை அளித்திருந்தார்.

கர்நாடக முதல்வர், அரசியல் காரணங்களுக்காகத் தான் தன்னை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார். மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் விதிக்குப்பட்டுதான் எனது மனைவிக்கு நிலம் அளித்தது. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ADVERTISEMENT

அதனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் என்னை விசாரிக்க ஆளுநர் அளித்த ஒப்புதலை ரத்து செய்யவேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் சித்தராமையாவின் மனுவை விசாரித்த நீதிபதி எம் நாகபிரசன்னா, “பொதுவாக ஒரு மாநிலத்தின் ஆளுநர் அம்மாநில அமைச்சர்களின் ஆலோசனையின்படிதான் செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

ஆனால் சில விதிவிலக்கான சூழ்நிலையில், தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது. இந்த வழக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான்” என்று கூறி முதல்வர் சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதற்கு சித்தராமையாவின் தரப்பு “ மேல்முறையீடு செய்வதற்காக, நீதிமன்றம் இந்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குத் நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது.

ஆனால் நீதிபதி நாகபிரசன்னா “ எனது உத்தரவை நானே நிறுத்தி வைக்க முடியாது.” என்று சித்தராமையா தரப்பு கோரிக்கையை மறுத்துவிட்டார்.

இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால், சித்தராமையா கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், கர்நாடகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சிக்கிய வலுவான ஆதாரங்கள் : கொச்சியில் மறுப்பு, டெல்லிக்கு ஓட்டம் பிடித்த நடிகர் சித்திக்

10 மாதங்களுக்கு பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

ராகுல் டிராவிட் மகனை துரத்தும் சோகம்… ஏன் இப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share