ஐபிஎல் மட்டும் தான் ஆடுவாரு போல… இளம்வீரரை வறுக்கும் ரசிகர்கள்

Published On:

| By Manjula

இளம்வீரர் சுப்மன் கில் டக்-அவுட் ஆகி வெளியேறிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 231 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இளம்வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

ADVERTISEMENT

குறிப்பாக ஜெய்ஸ்வவால் அவுட்டாகி வெளியேறிய அதே ஓவரிலேயே கில்லும் அவுட்டாகி வெளியேறினார். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த கில் இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனார்.

நன்றாக ஆடிவந்த இந்திய அணி தற்போது 136 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் தற்போது பரத் (8), அஸ்வின் ( 7) இருவரும் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியா இந்த முதல் டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு இன்னும் 95 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி இருப்பதால் ரசிகர்களின் கோபம் தற்போது கில் மீது திரும்பி உள்ளது.

https://twitter.com/bilal_khan_22/status/1751545498664661256

கடந்த 11 டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரை ஒரு அரைசதம் கூட கில் அடிக்கவில்லை. அதோடு அவர் 11 போட்டிகளிலும் மொத்தமாக எடுத்த ரன்களே 173 தான். பேட்டிங் சராசரி 17.3 ஆக உள்ளது.

https://twitter.com/JyotidwipN/status/1751527837541237044

இந்த புள்ளிவிவரங்களை பகிர்ந்து, ”கில் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் நன்றாக விளையாடுகிறார். அவருக்கு ஏன் இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம் கொடுக்கிறீர்கள்?” என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், ”ரஹானே, புஜாரா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் கில்லுக்கு மட்டும் வாய்ப்பளிக்க காரணம் என்ன?” என்று பிசிசிஐ டேக் செய்து ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த கடும் விமர்சனங்களால் இந்தியளவில் தற்போது #ShubmanGill ட்ரெண்டாகி வருகிறார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’சரியான திசையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு’ : சல்மான் குர்ஷித்

மணல் கொள்ளை: காவல்துறை Vs வருவாய்த்துறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share