நிச்சயமாக எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன. எனினும் நாங்கள் தோற்றோம் என குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார்.
சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நேற்று (மே 30) இரவு நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். Shubman Gill Interview
டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி போராடிய குஜராத் அணி, 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குஜராத் அணி முக்கியமான போட்டியில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இதனையடுத்து போட்டிக்கு பின்னர் குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பேசுகையில், “இந்த மைதானத்தில் 210 ரன்கள் எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். எனினும் கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டம் இது, நாங்கள் சரியாக ஆடினோம். கடைசி மூன்று-நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால் இது ஒரு நல்ல ஆட்டம் தான்.
போட்டியில் மூன்று எளிதான கேட்சுகளை விட்டால், பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதுதான் நடந்தது. Shubman Gill Interview
சாய் மற்றும் வாஷிங்டனுக்கு சொல்லப்பட்ட செய்தி இதுதான், ’நீங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தை விளையாடுங்கள், அணியை வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்பது. அதை அவர்களும் சிறப்பாக செய்தனர்.
பனிப்பொழிவு காரணமாக, விக்கெட் எங்களுக்கு கொஞ்சம் எளிதாகிவிட்டது. நிச்சயமாக எங்களுக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தன.
கடந்த 2-3 ஆட்டங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை. ஆனால் அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக சாய்க்கு பெருமை – இந்த சீசனில் அவர் எங்களுக்கு அற்புதமாக வீரராக இருந்தார்” என கில் தெரிவித்தார். Shubman Gill Interview