”தோத்துட்டோம் தான்… ஆனால் பாசிட்டிவ் கிடைச்சிருக்கு” : சுப்மன் கில் ஹேப்பி!

Published On:

| By christopher

shubman gill gives postive statement after loss

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 22) நடைபெற்ற போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டது. shubman gill gives postive statement after loss

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் சதமும் (117), நிக்கோலஸ் பூரன் அரைசதமும் (56*) விளாசினர்.

இதனையடுத்து 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 202 மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

எனினும் இந்த சீசனில் தடுமாறி வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாருக்கான் (57) மற்றும் ரூதர்போர்டு (38) ஆகியோரின் பேட்டிங் குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.

போட்டிக்கு பின்னர் சுப்மன் கில் அளித்த பேட்டியில், “நாங்கள் 15-20 ரன்கள் கூடுதலாகக் கொடுத்தோம். அவர்களை 210 ரன்களுக்குள் நிறுத்த விரும்பினோம். 210க்கும் 230க்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம். பவர்பிளேயில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம், விக்கெட்டுகள் எதுவும் எடுக்கவில்லை, ஆனால் பவர்பிளேக்குப் பிறகு 14 ஓவர்களில் அவர்கள் 180 ரன்கள் எடுத்தனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை 17வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் சரியாக இருந்தோம், 240 ரன்களைத் துரத்துவது ஒருபோதும் எளிதாக இருக்காது.

எனினும் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ்கள் கிடைத்துள்ளது. மிடில் ஆர்டரில் ரூதர்ஃபோர்டு மற்றும் ஷாருக்கின் பேட்டிங் ஒரு பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. பிளே ஆஃப் செல்வதற்குள் மீண்டும் கொஞ்சம் வேகம் பெறுவது முக்கியம். கடைசிப் போட்டியில் வெற்றிப் பாதைக்குத் திரும்புவோம்” என கில் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share