இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் குழு, இன்று திட்டமிட்டபடி விண்வெளிக்கு பயணமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. Shubhanshu Shukla Axiom Mission 4
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினர் பால்கான்-9 ராக்கெட் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் 6 முறை இந்த பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜூன் 25-ந் தேதி பகல் 12.01 மணிக்கு திட்டமிட்டபடி சுபான்ஷு சுக்லா குழு விண்வெளிக்கு பயணமாகிறது. இதற்கான ஆக்சியம்-4 திட்ட ராக்கெட்டின் செயல்பாடுகள் முழுவதும் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி பயணத்துக்கான வானிலையும் 90% சாதகமாக உள்ளதால் திட்டமிட்டபடி சுபான்ஷு சுக்லா குழு இன்று விண்வெளி மையத்துக்கு பயணம் மேற்கொள்வது உறுதி எனவும் கூறப்படுகிறது.
