ADVERTISEMENT

விஜய் சேதுபதி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடும் பாட்டு!

Published On:

| By Minnambalam Desk

Kannakuzhikaaraa song in the film Train

கமலஹாசனின் மகள், தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளில் ஒருவர், நல்ல பாடகி என்று பல முகங்கள் கொண்டவர் ஸ்ருதிஹாசன்.

வித்தியாசமான படங்களின் நடிகர் விஜய் சேதுபதி, அப்னார்மலான படங்களின் இயக்குனர் மிஷ்கின்.

ADVERTISEMENT

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படம் ட்ரெய்ன். மனைவியின் சமாதியில் அஞ்சலி செலுத்த ரயிலில் பயணிக்கும் ஒருவருக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் நடக்கும் சம்பவங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்று படத்தின் கதை போகிறது.

ட்ரெயின் என்ற பெயர் ராசியோ என்னவோ படம் உருவாகும் காலமும் கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்ட் ஆக நீண்டு போகிறது.

ADVERTISEMENT

எந்த ட்ரெயின் ஆனாலும் ஒரு நாள் ஸ்டேஷனுக்குள் வந்துதானே ஆக வேண்டும். இந்த ட்ரெயினுக்கும் அந்த நாள் வர போகிறது என்பது புரிகிறது.

இந்தப் படத்தில் கன்னக்குழிக்காரா என்ற ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார்.

ADVERTISEMENT

“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமாக மாறுகிறது. ஒரு நடிகை, தன்னுடைய குரலால் மற்றொரு நடிகரின் திரை இமேஜை மேலும் அழகாக வடிவமைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் இந்தப் பாடலில் அது இயல்பாக நிகழ்ந்துள்ளது.

விஜய் சேதுபதி என்ற நடிகர், சாதாரண மனிதர்களின் வாழ்க்கை, வலிகள், காதல், நகைச்சுவை என அனைத்தையும் இயல்பாக வெளிப்படுத்துபவர். அவரின் அந்த “ரியலிஸ்டிக்” திரைத் தோற்றத்திற்கு, ஸ்ருதிஹாசனின் குரல் ஒரு மென்மையான ஆன்மாவை சேர்த்தது போல அமைந்துள்ளது. குறிப்பாக, பாடலின் வரிகளில் வரும் சின்ன சின்ன உணர்ச்சிகள், குரலின் ஏற்றத் தாழ்வுகள் மூலம் இன்னும் ஆழமாக மனதில் பதிகின்றது.

இந்தப் பாடலின் இன்னொரு சிறப்பம்சமாக, இயக்குநர் மிஷ்கின் தானே இசையமைத்துள்ளார். பாடல்வரிகளை கபிலன் எழுதியுள்ளார். இசை, வரிகள், குரல் – மூன்றும் ஒன்றாக இணைந்து, பாடலை ஒரு தனித்த அனுபவமாக மாற்றியுள்ளன.

ஸ்ருதிஹாசனின் மயக்கும் குரலில் “கன்னக்குழிக்காரா” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இசை தளங்களில் முன்னணி வரிசையில் இடம் பிடித்துள்ளது.

ஒரு பக்கம் ஹாலிவுட் படைப்புகள், சலார் முதலாக பான் இந்திய படங்கள் என நடிகையாக கலக்கி வரும் ஸ்ருதிஹாசன், தனது இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் தவறுவதில்லை. பெரிதும் எதிர்பார்க்கும் விரைவில் அவரது அடுத்த இசை முயற்சி மற்றும் திரைப்பட அறிவிப்புகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.”என்கிறது படக் குழு

சுருதி இன்னும் சுருதி கூட்டட்டும்

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share