சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். shruthi narayanan guts audio launch goes viral
ரங்கராஜ் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் கட்ஸ் படத்தின் ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் நேற்று (ஏப்ரல் 7) நடந்த கட்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஸ்ருதி நாராயணன் கலந்து கொண்டார்.

என்ன செய்யனும்னு எனக்கு தெரியல!shruthi narayanan guts audio launch goes viral
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”கட்ஸ் பட வாய்ப்பை கொடுத்த எழுத்தாளர், இயக்குநர் ரங்கராஜ் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் செகண்ட் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். கேரக்டர் என்பது கதைக்கு ஏற்றது போன்று மாறும். இந்த படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர் ரொம்ப டிஃபிகல்டா நான் எஸ்டாப்லிஷ் செய்திருக்கிற கேரக்டர்.
என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியவில்லை. எனக்கு ஆதரவாக இருந்து, என்ன பண்ண வேண்டும், எப்படி பண்ண வேண்டும் என எல்லாத்தையும் எனக்கு கற்றுக் கொடுத்த ரங்கராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இன்ச் இன்சா டீடெய்ல்ஸை எனக்கு கத்துக் கொடுத்தார்.
எனக்கு இது புது பிளாட்பார்ம். ஆனால் நீங்களும் இங்கு புது ஆள் என்பதை என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என்னை விட மிகவும் பெர்ஃபக்டாக நீங்கள் எனக்கு கத்துக் கொடுத்தீங்க. இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. கட்ஸ் படத்திற்கு உங்களின் ஆதரவு தேவை” என பேசினார் ஸ்ருதி.
டைகர் – ஜாக்குவார் மோதல்! shruthi narayanan guts audio launch goes viral
இதற்கிடையே அவருக்கு முன்னதாக பேசிய டைகர் சக்கரவர்த்தி, “திரையுலகில் உள்ள சங்கங்களில் வயதானவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் உள்ளனர். அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும். இதில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு கொண்டு வர வேண்டும்” என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஜாக்குவார் தங்கம், “சங்கப் பிரச்சனையெல்லாம் இந்த இடத்தில் ஏன் பேச வேண்டும். அதையெல்லாம் இங்கே பேசக் கூடாது. அதென்ன முதியோர் இளைஞர்கள்? திருடாதவர்கள் முதியோர்கள்.. திருடுபவர்கள் இளைஞரா” என்று கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து அவரை சமாதனப்படுத்த மேடையில் இருந்த படக்குழுவினர் முயன்ற நிலையில் அவர்களிடமும் ஜாக்குவார் தங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விழா மேடையே பரபரப்பானது.